என்புதோல் போர்த்த உடம்பு

நகர மாந்தர் பலருக்குப் பூனைகளின் மீதான பரிவு அதிகரித்திருக்கிறது பூனை உணவுக் கடையில் அலைமோதுகிறது கூட்டம் பூனை மலஜலம் கழிப்பதற்கான நறுமண மண் பூனைகள் தள்ளியாடும் பந்து பூனைகள் விளையாடும் (கொல்லவும் முடியாத உயிர்க்கவும் தெரியாத) செயற்கை எலி இந்த எலிக்கு மட்டும் கிராக்கி அதிகம் பூனைகளுக்கான பிரத்யேக பிஸ்கட் பூனை வீடு பூனைக் கூண்டு பூனைக்குப் பிடித்த மீன் உணவிலேயே பத்து ரகம் பதினைந்து விதம் பூனைச் சட்டை பூனைக்கான மணி நான் வாங்கியவற்றுக்குப் பதினேழாயிரம் … Read more

easy on me…

Adele எனக்கு மிகப் பிடித்த பாடகி. அடிக்கடி கேட்கும் பாடகி. ஆனால் இவருடைய மிக அதிகமாக விற்றிருக்கும் இந்தப் பாடலை இப்போதுதான் கேட்டேன். உடனடியாக ஒரு கிளாஸ் வைனை அருந்தி விட்டு இந்தப் பாடலுக்கு ஆட வேண்டும் என்று தோன்றுகிறது. எனக்கு cradle of filth குழுவின் hard rock பாடல்களும் பிடிக்கும். இது போன்ற மென்மையான பாடல்களும் பிடிக்கும். நீங்களும் கேட்டு இன்புறலாம். https://www.youtube.com/watch?v=U3ASj1L6_sY

ஜிக்லோ எனும் பசி நாய்

உன்னைப் பற்றி எடுக்க வேண்டும் ஒரு ஆவணப் படம் உன் சுயசரிதம் சொல்லென்றான் நண்பன் சில காலம் நான் ஜிக்லோவாக இருந்தேன் என்று  தொடங்கினேன் ஆனால் நான் ஜிக்லோவாக இருந்தபோது ஜிக்லோ பெயர் தெரியாது ஒரு சமயம் எனக்கொரு மருத்துவனோடு நட்பு ஏற்பட்டது எடுத்த எடுப்பில் தொடையில் கை வைத்தான் அதுவரை நான் ஓரினச் சேர்க்கையாளன் அல்ல என்றாலும் அவன் ஸ்பரிசம் கிளர்ச்சியூட்டியது தொடர்ந்து சிலமுறை ஆடை களைந்து போகம் தரித்தோம் ஒருநாள் அவன் மனைவி மீதான … Read more

கனவில் ஒரு கவிதை

“நீயும் கனவிலா வர வேண்டும், இதையும் மறந்துவிடுவேனே?” “கவலை கொள்ளாதே, கனவிலும் இருப்பேன், நனவிலும் இருப்பேன்.” ஒவ்வொரு எழுத்தாக வார்த்தையாக வாக்கியமாக அர்த்தமாக படிமமாக எல்லாவற்றையும் எழுதிக் காண்பித்தது. “மேலே கேள் என்ன வேண்டும்?” “கனவு, மறந்து விடும் இல்லையா?” என்று புலம்பினேன் ”இதோ பார், இது கனவல்ல, கனவு போல் தோன்றுகிறது. இதன் பெயர்  நனவு, அவ்வளவுதான் கவலை விடு.” “என்னைப் பற்றி உனக்குத் தெரியாது எனக்கு மறதி அதிகம். நனவில் கனவு மறந்து விடும்.” … Read more

தனியாக வாழ்தல்…

அவந்திகா ஒரு வாரம் மும்பை செல்கிறாள்.  இதுவரை அவள் எந்தப் பயணமும் செய்ததில்லை.  ஊருக்கும் போனதில்லை.  ஏதாவது ஆன்மீகக் கூட்டம் என்று போனாலும் மறுநாளே வந்து விடுவாள்.  இப்போதுதான் முதல் முறை.  அதனால் எனக்கு வீட்டில் தனியாக வாழ்வது எப்படியிருக்கும் என்று தெரியாது.  வாஷிங் மெஷின் போடுவதற்கு சொல்லிக் கொடு என்றேன்.  உனக்கு வராது, நீ கெடுத்து விடுவாய் என்றாள்.  இதுவரை மாப் போட்டதில்லை.  பணிப்பெண் கிடையாது.  பாத்திரம் தேய்ப்பது சுலபம்.  தினந்தோறுமே 75 சதவிகிதம் நான் … Read more

பாரிஸும் சீலேயும்…

ஆவணப்படத்துக்கான நிதி திரட்டல் தொடர்பாக இன்னும் ஒரு விஷயம்.  சில ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் ராம் என் துருக்கி பயணத்துக்கான மொத்த செலவையும் ஏற்றுக் கொண்டார்.  அதனால்தான் நிலவு தேயாத தேசம் என்ற என் பயணக் கட்டுரை நூல் கிடைத்தது.  அது போல, இப்போதைய சீலே பயணத்துக்கு நீங்கள் பணம் தர முடியாது போனால் சீலேவுக்கான என் டிக்கட் செலவை ஏற்கலாம்.  நானும் இயக்குனரும் செல்வோம்.  சாத்தியம்தான்.  தமிழில் உள்ள எல்லா பதிப்பகங்களும் என் புத்தகத்தை வெளியிட … Read more