ரஜினி: தன் பிம்பத்தின் சுமை

மீள் பிரசுரம் தமிழ் இந்து டிசம்பர் 12, 2013 ரஜினி பிறந்த நாளில் ரஜினிபற்றி ஒரு மீள்பார்வையில் நாம் யோசிக்கலாம். மற்ற நடிகர்களையும் ரஜினியையும் வேறுபடுத்திக் காட்டும் தன்மை என்னவென்றால், ரஜினியிடம் இருக்கும் ஒரு மின்காந்த வசீகரம். அதனால்தான் ஒரு சிறிய குழந்தைகூட ரஜினியைப் பார்த்தால் குதூகலம் அடைகிறது. உலக அளவில் இதே போன்ற வசீகரத்தைக் கொண்டவராக இருந்தவர் மைக்கேல் ஜாக்ஸன். அவரைப் பார்த்த மாத்திரத்தில் ரசிகர்கள் பரவசம் அடைந்தார்கள். ஆனந்த மிகுதியில் கண்ணீர் விட்டார்கள். அப்பேர்ப்பட்ட … Read more

ஆட்டிப்படைத்த மாயம்: சில்க் ஸ்மிதா

மீள் பிரசுரம் தி சண்டே இந்தியன் அக்டோபர் 30, 2011 பாலியல் தொழிலாளியாக இருந்து, பின்னர் எழுத்தாளராக மாறிய நளினி ஜமீலா ஒருமுறை என்னிடம் குறிப்பிட்டார். அவருடைய சுயசரிதை நூல் கேரளத்தில் பிரபலமான பிறகு அவருடைய நேர்காணல்கள் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சியிலும் வெளிவரத் தொடங்கின.  அப்போது அவருக்கு தினமும் நூற்றுக்கணக்கான காதல் கடிதங்கள் வர ஆரம்பித்தனவாம்.  காதல் என்றால் எப்படிப்பட்ட காதல்?  “உங்களோடு ஒரே ஒருமுறை செக்ஸ் அனுபவிக்க வேண்டும்.”  இதைப் பற்றி சிரித்துக் கொண்டே குறிப்பிட்ட ஜமீலா, … Read more

யாதும் ஊரே யாவரும் கேளிர்!

மீள் பிரசுரம் ஜுனியர் விகடன் ஜூலை 5, 2017 யாதும் ஊரே யாவரும் கேளிர்! இது எல்லோருக்கும் தெரிந்த வரி தான். பரவலாக புழக்கத்தில் இருக்கிற வரியும் கூட. ஆனால், இந்த வரியைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறோமே ஒழிய அதன் உள்ளீடான பொருளை நாம் உணர்ந்ததில்லை. உண்மையில், அந்த வரியை முழுமையாக உள்வாங்கிக் கொண்டோமானால், நாட்டில் இருக்கிற பிரிவினைவாதம், குறுகிய மனோபாவம் எல்லாம் காணாமல் போய்விடும். வன்முறை இல்லாத சமூகமாக நம் சமூகம் மாறிவிடும். ஆனால், இதை … Read more

நான்தான் ஒளரங்ஸேப்

நான்தான் ஒளரங்ஸேப் வாங்க இந்த இணைப்பைச் சொடுக்கவும். https://www.zerodegreepublishing.com/collections/books/products/naan-thaan-aurangazeb-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%94%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D-charu-nivedita-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-pre-book

ஓநாய் குலச் சின்னம் – மதிப்புரை

மீள் பிரசுரம் அக்டோபர் 14, 2012 ஏசியன் ஏஜ் (கட்டுரையின் தமிழ் மூலம்) Jiang Rong எழுதிய Wolf Totem என்ற நாவல், மா சே துங்கின் ரெட் புக்கைப் போல் மில்லியன் கணக்கில் விற்றுக் கொண்டிருக்கிறது.  இந்த நாவலை இலக்கியம் என்று சொல்வதை விட ஆந்த்ரபாலஜி என்றே சொல்லுவேன்.  Oscar Lewis இன் La Vida என்ற ஆந்த்ரபாலஜி புத்தகத்தில் இருந்த அதே விறுவிறுப்பு இந்தப் புத்தகத்திலும் இருக்கிறது.  Puerto Ricoவின் San Juan நகரில் … Read more

பிரச்சினை

என் இளம் தோழி சொன்னாள் என் நண்பர்கள் பலர்  அவளுக்கு நட்பு விண்ணப்பம் அனுப்புவதாக அதில் என்ன தப்பு என்றேன் வேறு யாருமே எனக்கு நட்பு விண்ணப்பம்  அனுப்புவதில்லை என்றாள் ஏன் என்றேன் ஃபேஸ்புக்கில் நானொரு ஃபேக் ஐடி  மட்டுமல்லாமல் அங்கே  நீங்கள் ஒருவர்தானே என் நண்பர்  என்றாள்