அன்பு குறித்து ஒரு புகார் மனு

அன்பு குறித்து ஒரு புகார் மனு இதுதான் நான் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் நாவலின் தலைப்பு. நேற்று மனுஷிடமும் நேசமித்ரனிடமும் அராத்துவிடமும் பேசினேன். இதே வார்த்தைகளை வைத்து வெவ்வேறு விதமாக யோசித்தோம். கடைசியில் இந்தத் தலைப்பை முடிவு செய்தேன். முடியும் தறுவாயில் (பல எழுத்தாளர்கள் தருவாயில் என்று போடுகிறார்கள்!) இருக்கிறது. இன்றோ நாளையோ முடித்து விடுவேன். புத்தகத்தில் 200 பக்கம் வரும். ஔரங்ஸேப் மாதிரி இல்லாமல் முழுக்க முழுக்க ஆட்டோஃபிக்‌ஷன். இனிமேல் ஆட்டோஃபிக்‌ஷன் எழுத சரக்கு இல்லை … Read more

மனுஷ்ய புத்திரன் புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழ்

வைரமுத்துவையும் வைத்துக் கொண்டு சிறப்புரை சாரு நிவேதிதா என்று போட ஹமீதுக்கு எத்தனை தைரியமும் என் மீது நம்பிக்கையும் இருக்க வேண்டும்? வைரமுத்துவிடம் தமிழ் விளையாடும். எனக்குப் பேச வராது. ஆனால் ஒன்று உறுதி. என் மனதிலிருந்து பேசுவேன். வந்து விடுங்கள்.

ஏழாம் தேதி புத்தக வெளியீடு

வரும் ஏழாம் தேதி நந்தனம் புத்தக விழாவில் உள்ள பிரதான அரங்கத்தில் மனுஷ்ய புத்திரனின் பன்னிரண்டு கவிதைத் தொகுதிகளும் ஒரு நாவலும் வெளியாகின்றன. அதில் மனுஷின் கவிதைகள் பற்றிப் பேசுகிறேன். ஏற்கனவே அவருடைய கவிதைகள் பற்றி நான் பேசிய மிக முக்கியமான உரை காணாமல் போய் விட்டது. பதிவு செய்த பேச்சு யாரிடமும் இல்லை. இந்த முறை அப்படி நடக்காமல் கபிலன் அதைப் பதிவு செய்து விடுவார் என நம்புகிறேன். ஆனால் இந்த முறை இரண்டு நட்சத்திரப் … Read more

கர்னாடக முரசும்…

கர்னாடக முரசும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும் என்ற இந்தப் புத்தகம் உங்களிடம் இல்லையெனில் – என்னைக் கோபித்துக் கொள்ளாதீர்கள் – உங்களை என் நண்பராக நான் எண்ண மாட்டேன். இந்தப் புத்தகத்தைத் தட்டச்சு செய்து தருவதற்கு யாரும் கிடைக்காததால் என் நண்பர் அவருடைய நண்பரின் அலுவலகத்தில் இரவு நேரத்தில் தட்டச்சு செய்ததாகச் சொன்னார். இந்தப் புத்தகம் அளவுக்குத் தமிழில் அலைகளைக் கிளப்பிய புத்தகம் வெகு சில தான் இருக்க முடியும். ஜே.ஜே. … Read more

சாரு நிவேதிதாவால் பெருமாள் முருகன் ஆக முடியவில்லை, ஏன்?

என் எழுத்து பற்றியும், என் எழுத்தை எதிர் கொண்ட தமிழ்ச் சமூகம் பற்றியும் ஒரு சிறப்பான ஆய்வு. த. ராஜன் ஆரம்பித்து வைத்த விவாதத்தை மனுஷ்ய புத்திரன் முடித்து வைக்கிறார். முக்கியமான புத்தகம். வாங்கிப் படியுங்கள். ஆட்டோநேரட்டிவ் பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சிறிய புத்தகம். சாருவால் பெருமாள் முருகனாக முடியவில்லை (razorpay.com)

மாயம்

அடிக்கடி நண்பர்கள் நீங்கள் பயன்படுத்தும் முகக் களிம்பு என்ன பிராண்ட் என்று கேட்கிறார்கள். சொல்கிறேன். அதற்கு முன்னால் ஒரு விஷயம். தங்கமான சப்ஜெக்ட். எம்ஜியார் தங்க பஸ்பம் சாப்பிடுவார் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அது உண்மைதான். நானும் ஒரு பத்து வருட காலம் தங்க பஸ்பம் சாப்பிட்டேன். விவரம் மற்றும் பலன் எக்ஸைல் நாவலில் எழுதியிருக்கிறேன். உறவு துண்டானதும் பஸ்பத்தை நிறுத்தி விட்டேன். தேவைப்படவில்லை. இவ்வளவுதான் வெளிப்படையாக சொல்ல முடியும். ஆயுர்வேதத்தில் எல்லாம் இருக்கிறது. அதேபோல் தங்கத்தைப் பொடி … Read more