அன்பு நாவல் பற்றிய ஒரு நேர்காணல்

அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு நாவல் பற்றிய சிறிய அறிமுகத்தை கேள்வி பதில் மூலமாக நானும் அராத்துவும் நேற்று புத்தக விழாவில் ஸீரோ டிகிரி அரங்கில் நிகழ்த்தினோம். அரங்கு எண் எஃப் 19. பல நண்பர்கள் புத்தகம் தபாலில் கிடைக்குமா, ஆன்லைனில் ஆர்டர் செய்ய முடியுமா என்று கேட்டு எழுதியிருக்கிறார்கள். இன்னும் இரண்டொரு நாளில் ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்ய முடியும். புத்தக விலை 340 ரூ. மற்ற விவரங்களை நீங்கள் ஸீரோ டிகிரி பதிப்பகத்துக்கே … Read more

அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு குறித்து ஒரு வார்த்தை

அன்பு நாவல் வெளிவந்து விட்டது.  கையெழுத்திட்டுக் கொடுப்பதற்காக நாளை நான்கு மணிக்கே ஸீரோ டிகிரி அரங்கிற்கு வந்து விடுவேன். அரங்கம் எண் எஃப் 19.   இது குறித்து ஒரு விண்ணப்பம் தெரிவிக்க வேண்டும்.  அச்சகத்திடம் ராம்ஜி 200 பிரதிகள் சொல்லியிருந்ததாகத் தெரிந்து நான் அச்சகத்திடம் 300 பிரதி என்று சொல்லி விட்டேன்.  ராம்ஜி அப்போது சர்வதேசப் புத்தகச் சந்தையில் இருந்ததால் அவரிடம் தெரிவிக்க முடியவில்லை.  அவரிடம் மாலையில்தான் தெரிவித்தேன்.  நட்பு கருதி நான் எடுத்துக் கொண்ட உரிமை … Read more

ஒளித்தீற்றல்: ஸ்ரீ

அதிகாலையிலொரு சொப்பனம்கண்காட்சி போன்றவொரு இடத்தில்நீயும் நானும் பேசியபடிஉலாவிக் கொண்டிருக்கிறோம்மறுநாள் நீ வரவில்லை என்கிறார்கள்எங்கு தேடியும் கிடைக்கவில்லைஎன் தொலைபேசி அழைப்பையும் எடுக்கவில்லைதிரும்பி வர இயலாதபடி மறைந்து விட்டாய்அடக்க இயலாமல் தேம்பித் தேம்பி அழுகிறேன்உணர்வு நிலைகொள்ளவில்லை***உனக்கான ஒரு கூட்டம்நானும் இருக்கிறேன்உன் நண்பனொருவன் என்னை அணுகிஉன்னை எனக்குப் பிடித்திருக்கிறதுகலவி கொள்ளலாமா என்கிறான்***ஒரு தனியறையில் அவனும் நானும்மூர்க்கமாக முயங்கிக் கிடக்கிறோம்இருவரும் சரியும் நிலையில்கைபேசி ஒலிக்கமிஸ் யூ குட்டி, எங்கே இருக்கிறாய்என்கிறான் கணவன்நித்திரையிலிருந்து கண்கள் திறக்ககனவென நம்ப நொடி சில ஆயிற்று***நான் இல்லை என்றால் … Read more

புத்தக விழா

ஒவ்வொரு ஆண்டும் புத்தக விழாவுக்குச் செல்லும் போது மகிழ்ச்சியும் உற்சாகமும் கொண்டாட்ட மனநிலையும் அதிகரிக்கிறது.  மதுரையிலிருந்தும் இன்னும் பல வெளியூர்களிலிருந்தும் என்னுடைய ஒரு கையெழுத்துக்காக இந்தப் புத்தக விழாவுக்காக வருகிறார்கள்.  இருபது ஆண்டுகளுக்கு முன்பு என் புத்தகங்களை ஒளித்து ஒளித்துப் படித்த சமூகம் இப்போது என் எழுத்தை மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டது. என் நூல்களை வாங்க  இப்போது யாரும் தனியாக வருவதில்லை.  குடும்பத்தோடு வந்து ஸீரோ டிகிரி நாவலை வாங்கிச் செல்கிறார்கள்.  காலம் … Read more

நாலு எழுத்துப் பெயர் கொண்ட நங்கை

நேற்று பொங்கலும் அதுவுமாய் கொஞ்சம் மனம் உடைந்து விட்டது விரிவாகச் சொல்ல வேண்டும் ஆனால் விரிவு கவிதைக்காகாது இரண்டுக்கும் இடையிலாகச் சொல்ல முயற்சிக்கிறேன் புத்தக விழாவில் நுழைகிறேன் ஸ்தம்பிக்க வைக்கும் அழகி ஒருத்தி என்னை நெருங்கி வந்து நான் உங்கள் வெறித்தனமான ரசிகை என்று சொல்லிக் கை குலுக்கினாள் பெயர் சொன்னாள் அழகாக இருப்பதை விட அதற்கேற்ப ஆடை தேர்வது ஒரு கலை இவள் கலைஞி அப்போது அந்தப் பக்கம் போன ஒரு இளைஞனை பம்பரத்தைச் சுண்டி … Read more

இன்னும் ஓரிரு தினங்களில் அன்பு. இப்போது முன்னட்டை ஓவியம்…

எது எழுதினாலும் அதை எழுதி முடித்த பிறகு அதிலிருந்து நான் விலகி விடுவேன். அது வாசகர்களுக்கானது. அவ்வளவுதான். ஆனால் அன்பு நாவலில் அப்படி இல்லை. அதை நான் ஒவ்வொருவரிடமும் கொண்டு போய் சேர்க்க வேண்டும். படிக்கச் சொல்லி யாசிக்க வேண்டும். அது என் சுவாசம். என் தவம். அதற்கு நான் பெரிதும் எதிர்பார்த்த அட்டைப் படம் வந்து விட்டது. ஓவியம் மணிவண்ணன். மணி வண்ணனை ஒரு மாணவராக எனக்கு 35 ஆண்டுகளுக்கு முன்பு தெரியும். சந்த்ரு வீட்டில் … Read more