4. ஜப்பான்: கனவும் மாயமும்

நேற்று தூக்கக் கலக்கத்தில் பதிவேற்றம் செய்ததால் லவ் அண்ட் பாப் படத்தின் சில புகைப்படங்களைச் சேர்க்காமல் போய் விட்டேன். அக்கட்டுரையோடு இப்புகைப்படங்களையும் சேர்த்து இன்னொரு முறை வாசிக்கவும். கட்டுரைத் தொடரைப் பாராட்டி பல மின்னஞ்சல்கள் வந்தன. அடுத்த கட்டுரை படு ரகளையாக இருக்கும்.

3. ஜப்பான்: கனவும் மாயமும்

கடந்த சில ஆண்டுகளாகவே ஜப்பான் பற்றிய செய்திகள் என் முயற்சி இல்லாமலேயே என் பார்வைக்கு வந்து கொண்டேயிருந்தன.  ஜப்பானிலேயே வசிப்பவர்கள், ஜப்பானில் இரண்டு மூன்று ஆண்டுகள் வசித்து விட்டு வந்தவர்கள், நீண்ட காலப் பயணிகள், அடிக்கடி ஜப்பான் சென்று வருபவர்கள் என்று பலரும் தன் அனுபவங்களைச் சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.  எனக்கே ஆச்சரியமாக இருக்கும், நாமோ ஜப்பானே செல்லப் போவதில்லை, நம் காதில் ஏன் இத்தனை ஜப்பான் செய்திகள் வந்து விழுகின்றன என்று. நான் படித்த செய்திகள், … Read more

ஷிபுயா கிராஸிங்: ரா. செந்தில்குமார்

1 அது மட்டும் தயைகூர்ந்து வேண்டாம் என்று திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டிருக்கும் போதே அந்தக் காட்சி விரிந்தது. அகலமான ஷிபுயா கிராஸிங். ஷிபுயா ரயில்நிலையத்தை விட்டு வெளியே வந்தவுடன் எதிரில் குறுக்கும் நெடுக்குமாக ஐந்து மிகப்பெரிய நடைபாதைகள். எதிரில் மிகப்பெரிய திரைகளில் கார்ட்டூன் ஓடிக்கொண்டிருந்தது. திரையின் ஓரத்தில் 7.30 என்று கடிகாரம் மணி காட்டியது. பச்சை விளக்கு எரிந்ததும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும், கறுப்பு கோட்சூட், வெள்ளை சட்டை அணிந்து தோளில் தொங்கும் அலுவலகப் … Read more

ரா. செந்தில்குமாரின் ஒரு கதையும் அக்கதையில் சொல்லப்படாத முடிவும்…

என்னிடம் ஒரு பழக்கம் உண்டு.  நான் யாரையாவது எழுத்தாளரை சந்திக்கச் சென்றால், அவர்களின் ஒரே ஒரு புத்தகத்தையாவது படித்து விட்டுச் செல்வேன்.  என்னை சந்திக்கும் பலரும் என்னுடைய ஒரு புத்தகத்தைக் கூட படித்ததில்லை என்று சொல்வதால் அதற்கு மாறுதலாக இருக்க வேண்டும் என்று இந்தப் பழக்கத்தைக் கைக்கொண்டிருக்கிறேன். அந்த வகையில் இப்போது நான் ஜப்பான் செல்வதால் என்னை அங்கே வரவழைக்கும் துளிக்கனவு இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த ரா. செந்தில்குமாரின் சிறுகதைத் தொகுதிகள் இரண்டையும் படித்து விடுவோம் என்று … Read more

ஜப்பான்: கனவும் மாயமும் – 2

கீழைத் தேசம், கீழைத் தேசத்து மக்கள், கீழைத் தத்துவம் – சுருக்கமாகச் சொன்னால் ஓரியண்டலிசம் என்றால் என்ன? ஓரியண்டலிசம் விஞ்ஞானத்துக்கும் நவீனத்துவத்துக்கும் எதிரானது.  தர்க்கத்துக்கு எதிரானது.  புதுமையையும் புரட்சியையும் ஒதுக்கி விட்டு, மரபையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பது.  அதன் காரணமாகவே வளர்ச்சி அடையாதது.  அதன் காரணமாகவே பின் தங்கிய நிலையில் இருப்பது.  அதன் காரணமாகவே துக்கத்திலும் துயரத்திலும் வறுமையிலும் உழன்று கொண்டிருப்பது.  அதிகாரத்துக்குப் பணிதல் என்பது மற்றொரு முக்கியமான ஆசியப் பண்பு.  அதிகாரம் என்பது அரசனாக இருக்கலாம், … Read more

புத்தகத் திருவிழா

வணக்கம் சாருஜப்பான் கட்டுரை வாசித்தேன். குருவி போல பறந்து கொண்டே இருக்கிறீர்கள். பயணம் நல்லபடியாக அமைய வாழ்த்துக்கள்.நேற்று தருமபுரி புத்தகத் திருவிழாவிற்குச் சென்றிருந்தேன்.ஏதோ கைவிடப்பட்ட பேய் பங்களா போல் இருந்தது. ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், கூட்டமே இல்லை. பதிப்பாளர்களிடம் பேசியபோது அவர்களும் விற்பனை மிகவும் குறைவாக இருப்பதாகவே சொன்னார்கள். மாலை 5 மணியளவில் ஒன்றிரண்டு பேர் தெரிந்தனர். பக்கத்தில் வெறிச்சோடியிருந்த அரங்கில் தனியாக ஒருவர் மைக்கில் பேசிக் கொண்டிருந்தார். ஈரோடு,சேலம் புத்தகத் திருவிழாக்களை விட கூட்டம் … Read more