சித்த பிரமை

திருப்பூர் என்று நினைக்கிறேன். ஊர் பெயர் மறந்து விட்டது. அங்கே என் வாசகர் ஒருவர் தன் குடும்பத்தோடு என் நண்பரும் சித்த மருத்துவருமான பாஸ்கரனைப் பார்க்கச் சென்றிருக்கிறார். வாசகர், அவர் மனைவி, அவர்களின் பதின்மூன்று வயது மகள். வாசகருக்கும் அவர் மனைவிக்குமான உடல்நலப் பிரச்சினைகளைக் கூறி மருந்து பெற்றிருக்கிறார். மகளுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. ஆனாலும் பாஸ்கரன் குழந்தையின் நாடியையும் பார்த்து விடுகிறேனே என்று சொல்லி சிறுமியின் நாடி பார்க்கிறார். பார்த்தால் சிறுமிக்கு சித்த மருத்துவத்தில் சொல்லப்படும் … Read more

பெட்டியோ முதல் பிரதியும் நூறாவது பிரதியும் விற்பனையில்…

பெட்டியோ நூறாவது பிரதி ஏற்கனவே என்.எஃப்.டி.யில் விற்பனையில் இருக்கிறது. ஒரு வாரத்துக்கு முன் ஐந்து லட்சமாக இருந்தது இன்று 7159 டாலருக்கு விலை உயர்ந்து விட்டது. இன்றைய மதிப்பில் கிட்டத்தட்ட ஆறு லட்சம் ரூபாய். ஒரு வாரத்தில் ஒரு லட்சம் ரூபாய் அதிகரித்திருக்கிறது. டாலர் மதிப்புக்கு ஏற்பவும், சந்தை மதிப்புக்கு ஏற்பவும் இந்த விலை கூடும், குறையும். இன்று பெட்டியோவின் முதல் பிரதி வெளிவந்து இருக்கிறது.  விலை ரூபாய் இரண்டு லட்சம்.  இந்த ஐந்து லட்சம், ஆறு … Read more

Cult writer

என்னைப் பற்றிய விவரக் குறிப்பில் ஆங்கிலத்தில் cult writer in Tamil என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.  கல்ட் என்பதை பொதுவாக தவறான பொருளிலேயே நாம் புரிந்து வைத்திருக்கிறோம். காரணம், அந்த வார்த்தை பெரும்பாலும் ஆன்மீக சம்பந்தம் கொண்டிருக்கிறது. ஓஷோ ஒரு கல்ட்.  ஜக்கியை என்னால் கல்ட் என்று சொல்ல முடியவில்லை.  அவர் ஒரு யோகா குரு.  அவ்வளவுதான்.  கல்ட் என்றால் அந்த கல்ட் மனிதனின் சிந்தனை மற்றவர் வாழ்வின் அனைத்து அம்சங்களோடும் ஊடாடி ஊடுருவி இருக்க வேண்டும்.  தமிழ் … Read more

பெட்டியோ…

அநேகமாக இன்றோ நாளையோ பெட்டியோ என்.எஃப்.டி.யில் கிடைக்கும். முதலில் பத்து பிரதிகள் வெளிவரும். முதல் பிரதி இரண்டு லட்சம் ரூபாய். இரண்டாவது பிரதியிலிருந்து பத்தாவது பிரதி வரை ஒரு லட்சம் ரூபாய். இந்தப் பணம் அவ்வளவும் என்னுடைய ஃபெப்ருவரி மாத தென்னமெரிக்கப் பயணத்துக்கு உதவும். ஒன்றரை மாதப் பயணம். ஃப்ரான்ஸ், ஸ்பெய்ன், கொலம்பியா, சீலே. சாந்த்தியாகோ (சீலே) நகரிலிருந்து மேற்கே கிட்டத்தட்ட 4000 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ராப்பா நூயி என்ற தீவுக்கும் செல்கிறோம். ராப்பா நூயியை … Read more

கொக்கரக்கோவின் வனவாசம் (குறுங்கதை)

பெருமாள் கடந்த முப்பது ஆண்டுகளாக ஒருபோதும் தனிமையில் இருந்ததில்லை. வைதேகிக்கு வீட்டை விட்டு வெளியே செல்வது பிடிக்காது என்பதால் அவள் எப்போதுமே வீட்டில்தான் இருப்பாள். அதன் காரணமாக பெருமாள் அவன் வீட்டில் எப்போதுமே தனியாக இருந்ததில்லை என்று சொல்லலாம். விதிவிலக்காக சென்ற ஆண்டு, மூன்று மாதம் மும்பை சென்றிந்தாள் வைதேகி. அவள் பெருமாளை விட்டுப் பிரிந்தால் அவன் குடித்துக் குடித்தே செத்து விடுவான் என்று என் நண்பர்கள் சிலர் அபிப்பிராயப்பட்டார்கள். ஒரு விஷயத்தை அடிக்கடி சொன்னால் நாமும் … Read more

ஔரங்ஸேப் ஆங்கில மொழிபெயர்ப்பு பற்றி…

ஹார்ப்பர்காலின்ஸ் உலகின் மிகப் பிரபலமான பதிப்பகம். இந்தியாவிலும் அப்படியே. இருந்தாலும் இந்தியாவில் ஹார்ப்பர்காலின்ஸில் பிரசுரம் ஆனாலும் அமெரிக்காவிலோ யு.கே.யிலோ நம் புத்தகம் பிரசுரம் ஆக வேண்டுமானால் அந்த நாடுகளில் உள்ள ஏதேனும் ஒரு பதிப்பகம்தான் பிரசுரம் செய்ய வேண்டும். அதற்கு நமக்கு ஒரு லிடரரி ஏஜெண்ட் தேவை. மற்றபடி வெளிநாடுகளில் ஔரங்ஸேப் கிண்டில் எடிஷன் கூடக் கிடைக்காது. இந்த நிலையில் அமெரிக்காவில் வசிக்கும் வளன் Conversations with Aurangzeb நாவலை இருபது பிரதிகள் வாங்கி தன் அமெரிக்க … Read more