ஆகப் பெரிய வரம்
இறைவரிடம் எதுவுமே வேண்டுவதில்லைஏனென்றால்கிடைத்த வரங்கள் அதிகம் –நீரோடை போல ஓடும் அமைதியில்,ரகசியத் தோட்டத்தின்இலைகளுக்கிடையே மறைந்து,நேரத்தின் கண்ணாடியில்பிரதிபலிக்காத உருவங்கள் போல–அதில் ஆகப் பெரிய வரம்என் மனையாள்என் எழுத்தைப் படிக்காமல்இருப்பதுதான்.