அரை நிமிட முட்டாள்தனம்

வேலையின் கயிறுகழுத்தை இறுக்கும் நிழல்ஆனால் அவளின் நினைவுமணலில் எழுதப்பட்ட மந்திரம்காற்றின் மொழியில் அலைகிறதுமறையாமல்மறுக்கப்படாமல். இம்சை செய்யேனென சத்தியமளித்தேன்பன்னிரண்டு மணி நேரம்ஒரு புனிதனைப் போல்ஒரு முட்டாளைப் போல்மௌனத்திலிருந்தேன்பிறகுமாலையின் மஞ்சள் நிறத்தில்சத்தியம் மீறிஃபோன் செய்தேன்அரை நிமிட உரையாடல்பைத்தியத்தின் பாலையில் விழுந்தநீர்த்துளிநட்சத்திரங்களாய் மாறுகிறது இந்த இம்சை இல்லாமல்விடுதலை எப்படி?நினைவுகள் பாசிபடிந்த கற்கள்கைகளில் பிடிபடாமல் நழுவுகின்றன நண்பன் கேட்கிறான்ஏன் உன் அந்தரங்கத்தைஉலகுக்குப் பகிர்ந்தளிக்கிறாய்? ஐம்பது ஆண்டுகளாய்அந்தரங்கத்தைத்தானே காகிதத்தில்வீசுகிறேன்?கவிதைக்குச் சலுகையில்லையா? வேப்பை இழுத்துவிட்டுபிரியத்துக்குரியவர்களுக்குஇம்சை கொடுக்காமல்வாழ்வது எப்படியென யோசித்தேன்ஆனால்அவள் நினைவு கத்தியைப் போல்மார்பைக் கிழிக்கிறது குதிரையின் … Read more

சாருவின் கவிதைகளைப் படிக்கிறீர்களா?

அன்புள்ள சாரு,பணிச்சுமையால் வழக்கமாகச் சந்திக்கும் சில நண்பர்களை சில மாதங்களாகப் பார்க்கவில்லை.ஆனால், எப்போதாவது அவர்கள் போனில் அழைக்கும்போது, உங்கள் கவிதைகளைப் பற்றி “சாருவின் கவிதைகளை படிக்கிறீர்களா?” என்கிறார்கள்.  ஒன்றிரண்டைத் தவிர எல்லாவற்றையும் படித்திருப்பேன்.  சில கவிதைகளைப் படித்துவிட்டு (எசக்) கவிதைகளை எழுதி பார்ப்பதுண்டு.ஆனால், என்னிடம் ஒரு தடுப்பாற்றல் இருக்கிறது.  நான் எல்லா கவிதைகளிலும் உட்புகுவதில்லை.  அதன் வாதையை, அல்லது இன்பத்தை வேண்டாம் என மறுத்து வெறும் வார்த்தைகளாக மட்டும் கடந்துவிடுவேன். அது லெளகீக வாழ்வில் சமநிலையைப் பேண … Read more

யோகா குரு சௌந்தரின் முதல் புத்தகம்: ஙப் போல் வளை

இதென்ன கெட்ட பழக்கம், “புக்கு போடறதெல்லாம்” என மனசுக்குள்ள இருந்து குரல் வந்த உடனேயே இந்த திட்டத்தை கை விட்டுருக்கனும், ஆனா புத்தி, சாதுர்யமாக இப்படி ஒரு பதிலை சொல்லியது.’ நீ யாருகூட சகவாசம் வச்சிருக்கியோ அந்த பழக்கம் தான உனக்கும் வரும், போ போய் பிரிண்டிங் வேலையப்பாரு’ -என ஆம். நம்ம சகவாசம் எல்லாம் எழுத்தாளர்களோடும், இலக்கிய தாதாக்களான சாரு டார்லிங் (வெறும் சாரு என அழைக்கக்கூடாது என கட்டளை) ,ஜெயமோகன் சார் ,எஸ்.ரா.சார் என, … Read more

கடைசி கலவி, கடைசி கவிதை

இறைவிஉனக்காக உன்னைப் பற்றியேஎழுதுகிறேன்பதிலுக்கு உன் ஒரு சொல்ஒரு கோடி நட்சத்திரங்களாய்என் மார்பில் உதிரும் ஆனால் இப்போதுஉன் பார்வையின் பாதை மாறி விட்டதுஎன் வார்த்தைகள்காற்றில் கரையும் எரிகற்கள் மூச்சு நிற்காமல் இருக்கவே எழுதுகிறேன்ஆனால்உனக்கு இது மூச்சு முட்டுவதாகஇருக்கிறதோ என்னவோ உனக்காக எழுதுவதைப்படிக்கிறாயாஎனத் தெரியாமல் எழுதிஎன்ன பயன் ஒவ்வொரு கலவியும்கடைசி கலவி எனஒவ்வொரு சொல்லும்கடைசி முத்தமெனஉன் நிழலில் விழுந்துமறைகிறது