இதென்ன கெட்ட பழக்கம், “புக்கு போடறதெல்லாம்” என மனசுக்குள்ள இருந்து குரல் வந்த உடனேயே இந்த திட்டத்தை கை விட்டுருக்கனும், ஆனா புத்தி, சாதுர்யமாக இப்படி ஒரு பதிலை சொல்லியது.’
நீ யாருகூட சகவாசம் வச்சிருக்கியோ அந்த பழக்கம் தான உனக்கும் வரும், போ போய் பிரிண்டிங் வேலையப்பாரு’ -என
ஆம். நம்ம சகவாசம் எல்லாம் எழுத்தாளர்களோடும், இலக்கிய தாதாக்களான சாரு டார்லிங் (வெறும் சாரு என அழைக்கக்கூடாது என கட்டளை) ,ஜெயமோகன் சார் ,எஸ்.ரா.சார் என, இருப்பதால் விதி வலியது என மனதை தேற்றிக்கொண்டு, உங்களையும் தேற்றிக்கொள்ளச்சொல்லி வருகிறது. நானும் ரவுடிதான் எனும் குரலுடன். என் முதல் புத்தகம்.இதில் யோகா கற்றுக்கொடுக்கவோ, ஆன்மீக அமானுஷ்யங்களையோ முன்வைக்க முயலவில்லை என்பது எனக்கே சற்று ஆசுவாசமாக இருந்தது. யோகத்தை இன்றைய வடிவில் புரிந்து கொள்ள ஒரு முயற்சி.


அடுத்த புத்தகம் பற்றிய அறிவிப்பை, இந்த நூலுக்கான நோபல் பரிசு மேடையில் அறிவிக்கிறேன்.அனைத்து வகையிலும் இதை முன்னெடுத்த ஜீவ கரிகாலனுக்கு நன்றி
புத்தகம் வாங்க லின்க்:
ஙப் போல் வளை – Book Pick