சார்பியல் கோட்பாடு

‘உன் மீது கொலைவெறி’
’சொல் இறைவி’
’ஒன்றரை நாள் பேசாதது
நீண்ட இடைவெளியா?
வாசகர் என்னைப் பற்றி
என்ன நினைப்பார்?’
’ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாடு
தெரியும்தானே?’
’ம்…’
’அவர் தன் காரோட்டியிடம்
சொன்னது தெரியுமா?
ஒரு யுகம் உன்னருகே
ஒரு நொடி
ஒரு நொடி உனைப் பிரிந்தால்
ஒரு யுகம்’
’ம்…’
’அப்புறமேன் கொலைவெறி?’