ஐரோப்பிய சினிமா: ஓர் அறிமுகம் – 1

வரும் நவம்பர் எட்டாம் தேதி பாண்டிச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் காலை பத்து மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை ஐரோப்பிய சினிமா பற்றி உரையாற்ற இருக்கிறேன். பதினொன்றரை மணிக்குத் தேநீர் இடைவேளை. ஒரு மணிக்கு மதிய உணவு. மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது. அதற்காக நீங்கள் சிரமப்பட வேண்டாம். மூன்றரை மணிக்குத் தேநீர் இடைவேளை. ஒன்றரை மணி நேரத்துக்கு ஒருமுறை வாசகர்களுடன் கலந்துரையாடல் நடக்கும். கேள்விகளுக்குப் பதில் தருவேன். ஒரே ஒரு வேண்டுகோள். நீங்கள் கேள்வி கேட்பதாக நினைத்து நீண்ட உரையாற்றக் கூடாது. திருவண்ணாமலையில் அப்படி சில நண்பர்கள் செய்தார்கள். அதில் என்ன பிரச்சினை என்றால், மற்ற பார்வையாளர்கள் அதை விரும்புவதில்லை என்பதுதான்.

குறைந்த பட்ச நன்கொடை 2000 ரூ. மாணவர்களுக்கு 1000 ரூ. எட்டு மாணவர்களுக்கு இரண்டு நண்பர்கள் 8000 ரூ. அனுப்பியிருக்கிறார்கள். ஆகவே, எட்டு மாணவர்கள் எனக்குத் தங்கள் தொலைபேசி எண், பெயர் ஆகிய விவரங்களை அனுப்ப வேண்டும். தவறாமல் நேரில் வர வேண்டும். வரவில்லையானால் மற்றொரு மாணவர் வருவதைத் தடுக்கிறீர்கள் என்று ஆகும்.

நிகழ்ச்சி நடக்கும்போதே ஒளிபரப்பு இந்த முறை சாத்தியம் இல்லை. ஆனால் நேரில் வர முடியாதவர்களுக்கு நிகழ்ச்சியின் ஒளிப்பதிவு அனுப்பி வைக்கப்படும். இதுவரை இருபது பேர்தான் பணம் அனுப்பி பெயர் கொடுத்திருக்கிறார்கள். திருவண்ணாமலையில் 300 பேர் கலந்து கொண்டார்கள். இந்த முறை எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு ஒரே காரணம், நான் தான். இந்த நிகழ்ச்சி பற்றி நான் தினந்தோறும் பதிவு போடுவதில்லை. அப்படி பதிவு போட்டு என்னை சாட்டையால் அடித்துக்கொண்டால் முந்நூறு என்ன, நானூறு கூட ஆகும் எண்ணிக்கை. ஆனால் இந்த முறை அப்படி என்னால் செய்ய இயலாது. நான் தியாகராஜா நாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன். வருவதாக இருந்தால் வாருங்கள். இல்லாவிட்டால் எனக்கு எந்த நஷ்டமும் இல்லை. நான் பேசப்போகும் ஐரோப்பியத் திரைப்படங்கள் பற்றி நீங்கள் வேறு எங்குமே கேட்கவோ படிக்கவோ முடியாது.

வாசகர் வட்ட நண்பர்களில் ஒரே ஒருவர்தான் 2000 ரூ. பணம் அனுப்பியிருக்கிறார். மற்றவர்களிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. கட்டணத்தை ராஜாவுக்கு அனுப்பி வைக்கலாம். என் தொலைபேசி எண் உள்ளவர்கள் எனக்கு ஜிபே செய்யலாம்.

ராஜாவின் தொலைபேசி எண்: 95975 00949

என் மின்னஞ்சல் முகவரி: charu.nivedita.india@gmail.com