இதயம் பலஹீனமானவர்கள் படிக்க வேண்டாம்… (மீண்டும்)

சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட இந்தக் குறிப்பிட்ட  கட்டுரை காணாமல் போய் விட்டதால் மீண்டும் பதிவிடுகிறேன். பத்துப் பனிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை அவந்திகாவின் வற்புறுத்தலுக்கு இணங்கி ஆயுள் காப்பீடு செய்து கொள்ள முயன்றேன்.  அதற்கான உடல் தகுதியைப் பரிசோதிக்க ஒரு மருத்துவரிடம் அனுப்பப்பட்டேன்.  மருத்துவர் மிக மிக செக்ஸியான ஒரு இளம் பெண்.  அப்படிப்பட்ட பெண் மருத்துவர்கள் கடுகடு என்று இருப்பர்.  அதற்கு மாறாக, இந்தப் பெண் கலகலவென்று சிரித்துப் பேசிக் கொண்டு சோதனைகள் செய்தார்.  … Read more

தயவு செய்து பழுப்பு நிறப் பக்கங்களை நிறுத்தி விடுங்கள்…

அப்பா, ஏற்கனவே உங்களிடம் கூறியிருந்தேன், பழுப்புநிறப்  பக்கங்களைப் படிக்கும் போதெல்லாம் கண்கள் கலங்குகின்றன என்று. தயவு செய்து நீங்கள் குறிப்பிடும் புத்தகங்கள் எங்கே கிடைக்கிறது என்று சொல்லிவிடுங்கள். சலிப்பூட்டும் தமிழ்ச்சூழலில் இப்படிபட்ட நூல்கள் வந்திருந்தும் படிக்காமல் போனேன் என்பது கவலையைத் தருகிறது. இந்த கவலை கவலையாக மட்டுமே தேங்கிவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன். எப்படியாவது நீங்கள் குறிப்பிடும் சிறுகதைகளையும் நாவல்களையும் வாசித்தே ஆக வேண்டும். மண்ணில் தெரியுது வானம் நற்றிணை பதிப்பகம் மூலமாக வரவிருப்பதாக சொன்னீர்கள்; காத்திருக்கிறேன். … Read more

புத்தக வெளியீட்டு விழா

ஹாய் சாரு, ம்யூசியம் தியேட்டரிலும், சர் பிட்டி தியாகராய அரங்கிலும் தலா 500 பேர் தான் உட்கார முடியும். நமக்கு பத்தாதுங்க சாரு. ஃபிலிம் சேம்பர் அரங்கில் 350 பேர் உட்காரலாம். அதுவும் பத்தாது. ம்யூசிக் அகாடமி, வாணி மஹால், நாரத கான சபா ஆகியவற்றில் தொலைபேசியில் கேட்டேன். டிசம்பர் முழுவதுக்கும் கச்சேரிக்கு மட்டும்தான் இடம் என்று கூறி விட்டனர். லேடி ஆண்டாள் பள்ளி அரங்கில் 1200 பேர் உட்காரலாம். கிட்டத்தட்ட இரண்டு லட்சம் ரூபாய் ஆகிறது. … Read more