தேகம் : திருத்தப்பட்ட பதிப்பு

தேகம் திருத்தப்பட்ட பதிப்பு கிழக்கு பதிப்பகத்திலிருந்து வெளிவந்துள்ளது.  கிடைக்கும் இடம்: தேகம் புதிய பதிப்பு ரூ.125/- கிழக்கு இணையதளம் – https://www.nhm.in/shop/978-93-5135-196-2.html அமேஸான் – http://www.amazon.in/Degam-Charu-Nivedita/dp/9351351963/ ஃப்ளிப்கார்ட் – http://www.flipkart.com/degam/p/itme7kz5dumuhzgd?pid=9789351351962   தேகம் நாவலின் முதல் பதிப்புக்கு நிர்மல் எழுதிய மதிப்புரைகள் கீழே:  http://www.pichaikaaran.com/2011/02/blog-post_02.html  http://www.pichaikaaran.com/2011/02/mrinzo.html http://www.pichaikaaran.com/2011/02/blog-post_06.html http://www.pichaikaaran.com/2011/02/blog-post_05.html

நிவேதனம்

பல ஆண்டுகளாக மகாமுத்ராவுக்கு brand ambassador ஆக இருந்தேன்.  அதேபோல் ரெமி மார்ட்டின்.  நான் சொல்லும் வரை ரெமி மார்ட்டினை யாருக்கும் தெரியாது.  சினிமா உலகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே ரகசியமாக உபயோகித்து வந்தனர்.  இப்போதோ அது தமிழ்நாடு முழுவதும் பிரபலமாகி விட்டது.  அதேபோல் ஹேகமைஸ்டர் (Jagermeister), சீனத்து அரச வம்சத்தினர் அருந்திய Wenjun. இப்போது மகாமுத்ராவில் இலக்கியவாதிகளையும் அடிக்கடி பார்க்க முடிகிறது.  ஆனால் மகாமுத்ராதான் முன்பு போல் இல்லை.  தரத்தில் மாற்றம் இல்லை.  நிர்வாகம்தான் மோசமாகி விட்டது.  … Read more

படிக்க வேண்டிய தத்துவவாதிகளின் பெயர்ப் பட்டியல்…

அப்பா, இங்கே ஒரு நல்ல நூலகம் உள்ளது.  அதில் நவீன சிந்தனையாளர்களைப் படிக்க விரும்புகிறேன்.  சிலரது பெயரை எனக்குச் சொல்லுங்கள். வளன். அன்புள்ள வளன், இதே போல் இன்னும் ஒரு கடிதம் வந்தாலும் நான் உன்னோடான தொடர்பை நிறுத்திக் கொள்வேன்.  எனக்கு மகா மன உளைச்சலைத் தரும் கடிதம் என்றால் இதுதான்.  ஏன் தம்பி, என்னுடைய எழுத்து ஏதாவதை நீ படித்திருக்கிறாயா இல்லையா?  என்னுடைய நூல்களைப் படித்திருந்தால் நீ நாலைந்து ஆயுட்காலம் படிப்பதற்கான தத்துவவாதிகளின் பெயர்களைத் தெரிந்து … Read more

பேசா மொழி

நண்பர்களே, தமிழ் ஸ்டுடியோவின் மாற்று சினிமாவிற்கான இணைய மாத இதழான பேசாமொழியின் 33வது இதழ் 5ஆம் தேதி வெளிவந்துவிட்டது. இந்த இதழில் காமிக்ஸ் பற்றிய ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவின் கட்டுரை மிக முக்கியமானது. பெண் இயக்குனர் ஹனா மெக்மல்பஃப் நேர்காணல், மொழியாக்க முயற்சியான ஜான் பெர்ஜரின் காணும் முறைகள் (தமிழில்: யுகேந்தர்) தமிழ் ஸ்டுடியோவின் பாலுமகேந்திரா விருது வழங்கிய நிகழ்வு பற்றிய பதிவு (தினேஷ்) ஒளி எனும் மொழி நூல் வெளியீட்டு விழா நிகழ்வின் தொடர்ச்சி, பார்வையாளர்களின் … Read more

காக்கா முட்டை

காக்கா முட்டை இன்னும் பார்க்கவில்லை.  தலை போகும் அவசரத்தில் தலையணை தலையணை சைஸ் புத்தகங்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.  இடையில் முகநூலை எட்டிப் பார்த்த போது காக்கா முட்டை என்று ஒரு படம் வந்திருப்பதாகத் தெரிந்து கொண்டேன்.  அதற்கு அராத்து ஒரு விமர்சனம் எழுதியுள்ளார்.  அதில் தலைமுறைகள் (பாலு மகேந்திரா) பற்றிய ஒரு குறிப்பு உள்ளது. என்னுடைய  சினிமா அறிவுக்கு எட்டியபடி அது சர்வதேசத் தரம் வாய்ந்த ஒரு படம்.  கடைசிக் காட்சியில் புத்தக வெளியீட்டு விழா என்ற … Read more