தமிழ் ஸ்டுடியோ – பாலு மகேந்திரா விருது விழா – அடியேனின் பேச்சு

நேற்று நடந்த பாலு மகேந்திரா விருது வழங்கும் விழாவில் என் நண்பர்களையும் வாசகர் வட்ட நண்பர்களையும் எதிர்பார்த்தேன்.   பிச்சைக்காரனைத் தவிர வேறு யாரையும் காணோம்.  எப்போதும் உள்ளதுதான் என்பதால் ஏமாற்றம் இல்லை.  ஆனால் ஆச்சரியமாக இருந்தது.  எப்படித் தனக்குப் பிடித்த எழுத்தாளனின் பேச்சைக் கேட்க விருப்பம் இல்லாதிருக்கிறார்கள் என.  பிச்சை என் பேச்சைக் குறிப்பெடுத்து அவருடைய தளத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறார். http://www.pichaikaaran.com/2015/05/blog-post_25.html order custom essay online

மராட்டி ஒரு இனிமையான மொழி

ஒவ்வொரு எழுத்தாளரின் ஒவ்வொரு புத்தகம் கிடைக்காமல் போய் விடுவதால் பலரைப் பற்றியும் எழுத முடியாமல் கிடக்கிறேன்.  பழுப்பு நிறப் பக்கங்களில் தஞ்சை பிரகாஷ் பற்றி எழுதலாம் என்றால் அவருடைய கரமுண்டார் வீடு கிடைக்கவில்லை.  அதேபோல் எம்.வி.வி.யின் நித்ய கன்னி.  பிரபு காளிதாஸ் கொண்டு வந்து தருகிறேன் என்றார்.  காலையில் வருகிறேன்.  அய்யோ, காலையில் வந்தால் பதினெட்டாம் நூற்றாண்டு நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளி மாதிரி இங்கே வீட்டில் வேலை செய்து கொண்டிருப்பேனே என்றேன்.  வீட்டு கேட்டுல தொங்குற பைல … Read more

ஜனவரி 9

யாரையும் வேலை நாளில் வறுத்து எடுக்க இனியும் விருப்பம் இல்லை.  சாவகாசமாக சனிக்கிழமையே வரலாம்.  ஜனவரி ஒன்பது அன்று என்னுடைய பத்துப் பனிரண்டு புத்தகங்கள் வெளியாகும்.  வாசகர் வட்ட நண்பர்களின் ஆறு ஏழு புத்தகங்கள் வெளியாகும். சென்ற ஆண்டு தருண் தேஜ்பாலைப் போல் இந்த ஆண்டு மனுஷ்ய புத்திரனை அழைக்கலாம் என்று இருக்கிறேன்.  நேரில் போய் தான் அழைக்க வேண்டும்.    நட்சத்திரப் பேச்சாளர் என்பதால் இப்போதே ‘புக்’ பண்ணி விட வேண்டும் இல்லையா? அரங்கம் பற்றிய … Read more

கிரிமினல்களுக்கு இடையே…

ஒருவர் அல்ல, பல கிரிமினல்களுக்கு இடையே வாழ வேண்டியிருக்கிறது.  வாழ என்பதை எழுத என்று வாசித்துக் கொள்ளவும்.  எனக்கு எழுத்து தான் வாழ்க்கை என்பதால்.  சாருஆன்லைனில் பல கிரிமினல்கள் உள்ளே புகுந்து என்னென்னவே ஆபாச வேலைகளைச் செய்து வருகின்றனர்.  மொத்தம் பத்தாயிரம் பின்னூட்டங்கள் உள்ளன.  எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக நீக்குவது கடினம்.  தொழில்நுட்ப வேலை நடந்து வருகிறது.  வாசகர்கள் பொறுத்துக் கொள்ளவும். அதேபோல் தினமணியில் எழுதி வரும் பழுப்பு நிறப் பக்கங்களிலும் பின்னூட்டம் என்ற பெயரில், நல்லவிதமான விமர்சனம் … Read more