ஒரு கடிதமும் பதிலும்…

சாருஆன்லைனில் வெளிவரும் ஆங்கிலக் குப்பைகள் நான் பதிவிடுவதல்ல.  சில கிரிமினல்களின் வேலை.  என் இணையதளப் பொறுப்பாளரின் பார்வைக்காக விட்டு வைத்திருக்கிறேன். பின்வருவது என்னுடைய ஒரு கடிதமும் அதற்கான பதிலும்: dear kuppuswamy, இதுதான் நான் உங்களுக்கு எழுதும் முதல் மின்னஞ்சல் என்று நினைக்கிறேன்.  நீங்கள் மொழிபெயர்த்த பனி படித்து விட்டேன். எனக்கு ஒவ்வொரு ஞாயிறும் பரீட்சை.  பழுப்பு நிறப் பக்கங்களை சனிக்கிழமை அனுப்பி விட வேண்டும்.  ஆனாலும் அதைத் தொடாமல் ஒரு வாரத்தில் பனியை முடித்து விட்டேன். … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள் : ஆ. மாதவன்

எப்படியான சூழலில் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பதை பழுப்பு நிறப் பக்கங்களுக்கு வரும் பின்னூட்டங்களிலிருந்து நீங்கள் புரிந்து கொள்ளலாம்.  மற்ற நாடுகளில் எழுத்தாளனை சிறையில் அடைப்பார்கள்.  நாடு கடத்துவார்கள்.  அல்லது சுட்டுக் கொல்வார்கள்.  தமிழ்நாட்டில் தொடர்ந்து செருப்பால் அடித்துக் கொண்டே இருப்பார்கள்.  அதுவும் எல்லா எழுத்தாளர்களையும் அல்ல;  என்னை மட்டும்தான்.  ஸீரோ டிகிரி ஆங்கிலப் பதிப்புக்கு பல்லவி என்பவர் ஒரு மதிப்புரை எழுதிய போது அதற்கு 190 ஆபாச பின்னூட்டங்கள் எழுதியவர்கள் என் தமிழ் நண்பர்கள்.  படு ஆபாசமான … Read more

அமித் திர்வேதியின் அடுத்த இசை விழா…

நண்பர் பிரகாஷ் பாலா இந்த இணைப்பை எனக்கு அனுப்பி வைத்திருந்தார்.  நான் பொதுவாக ஒரு வேலையை எடுத்துச் செய்து கொண்டிருக்கும் போது இடையில் வேறு எந்த வேலையையும் செய்யும் வழக்கம் இல்லை.  பழுப்பு நிறப் பக்கங்கள் அடுத்த அத்தியாயத்துக்காகப் பரீட்சைக்குப் படிப்பது போல் படித்துக் கொண்டிருக்கிறேன்.  இருந்தாலும் அனுராக் காஷ்யப்பின் அடுத்த படம் என்பதாலும் இசை அமித் திர்வேதி என்பதாலும் எட்டிப் பார்த்தேன்.  வார்த்தைகள் இல்லை, பாராட்ட.  யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும், இன்றைய இந்திய சினிமாவின் … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள் – அசோகமித்திரன்

இந்த வார கல்கியில் என்னுடைய ஒரு கலாட்டா பேட்டி வந்துள்ளது.  பார்க்கவும். பழுப்பு நிறப் பக்கங்கள்   – அசோகமித்திரன் (1)  & (2).   கூடவே பழுப்பு நிறப் பக்கங்களுக்கு வரும் ஆபாசப் பின்னூட்டங்களையும் நீங்கள் படித்து மகிழலாம். நாகூர் ரூமிக்கு மட்டும் ஒரே ஒரு சிறிய விளக்கம்.  நான் ஒருவரை ஆகா ஓகோ என்று பாராட்டுவதாகவும் பிறகு அவரைக் கீழே தள்ளி விடுவதாகவும் எழுதியிருக்கிறார்.   என்னுடைய 15 வயதிலிருந்து நான் இலக்கிய வாசகன். … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள் – 6

பழுப்பு நிறப் பக்கங்களில் இந்த வாரம் ந. சிதம்பர சுப்ரமணியன் பற்றி எழுதியிருக்கிறேன்.  இதுவரை எழுதியுள்ள ஆறு கட்டுரைகளில் இதைத்தான் மிகச் சிறந்தது என்று சொல்வேன்.  காரணம், ந. சிதம்பர சுப்ரமணியன் எழுதிய இதய நாதம், மண்ணில் தெரியுது வானம் ஆகிய இரண்டு நாவல்களும் என்னை ஒரு காந்தியவாதியாகவே மாற்றி விட்டன.  இனிமேல் ஏதாவது கூட்டங்களில் என் மீது வன்முறையைப் பிரயோகம் செய்து  என்னைப் பேச விடாமல் செய்தால் செருப்பால் அடிப்பேன் என்றெல்லாம் சொல்ல மாட்டேன்.  எனக்குப் … Read more