கார்னிவல்

சில மாதங்களில் தென்னமெரிக்கா செல்லக் கூடும்..  ரியோ கார்னிவல் மீது எனக்கு அவ்வளவு ஆர்வம் இல்லை.  பயம் தான் காரணம்.  அவ்வளவு பெரிய மனிதப் பிரளயத்தில் சிக்கி மீண்டு வர முடியுமா?  இப்படி யோசித்தபடி தேடியதில் இந்த கார்னிவல் மாட்டியது.  இதில் கலந்து கொள்ளல்லாம் என்று தோன்றுகிறது… https://www.youtube.com/watch?v=1lzXxiBeRhI

தெரிந்த நாவல், தெரியாத செய்தி : தி இந்து (2)

என் நண்பர் ஒருவருக்கு இந்துவில் என் கட்டுரை வந்திருக்கிறது; பாருங்கள் என்று குறுஞ்செய்தி அனுப்பினேன்.  தமிழ் இந்துவா என்று பதில் மெஸேஜ்.  அதற்கு நான் அனுப்பிய பதில்:  ”கேள்வியே தப்பு; தமிழ்நாட்டில் இருக்கும் ஆங்கிலப் பத்திரிகைகள் என்னைத் தீண்டத்தகாதவனாக நினைக்கின்றன.”   ‘என்னை’ என்பதை ‘தமிழ் எழுத்தாளர்களை’ என்றும் வாசிக்கலாம்.

தெரிந்த நாவல், தெரியாத செய்தி : தி இந்து

தினமணி.காம்-இல் எழுதி வரும் பழுப்பு நிறப் பக்கங்களுக்காக ஏராளமாகப் படிக்க வேண்டியிருப்பதால் தினசரிகளைப் படிக்க நேரம் இருப்பதில்லை.  இந்த நிலையில் இன்று பத்து மணி அளவில் ஒரு தொலைபேசி அழைப்பு.  பேசி முடித்ததும் அவந்திகா, “யாரிடம் இவ்வளவு பவ்யமாகப் பேசுகிறாய்?” என்றாள்.  லெனின், எடிட்டர் என்றேன்.  எனக்குத் துறவிகளின் மீது எப்போதுமே ஆர்வமும் அன்பும் உண்டு.  பக்தி என்று கூட சொல்லலாம்.  லெனின் நம்மைப் போல் லௌகீக வாழ்வில் இருந்தாலும் அவர் ஒரு துறவி என்றே எனக்குள் … Read more