க.நா.சு. the great!

தினமணி பழுப்பு நிறப் பக்கங்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய கவனிப்பும் பாராட்டுகளும் வந்து கொண்டிருக்கின்றன.  தொடர்ந்து செயல்படுவதற்கான ஊட்டச் சத்து மாதிரி இந்தப் பாராட்டு.  பாராட்டு என்பதை விட எல்லோரும் ஆர்வமுடன் படிக்கிறார்கள் என்பதே என்னை உற்சாகப்படுத்தும் முதல் விஷயம்.  அதிலும் தஞ்சை ப்ரகாஷ் கட்டுரைக்கு ஏகப்பட்ட எதிர்வினைகள்.  என் தவப்புதல்வன் சாம் எழுதியிருக்கிறான், யோவ், நீர் இப்போது படித்து விட்டதால் இங்கே ஒருத்தரும் படிக்கலைன்னு அர்த்தமாயிடுமா, லக்ஷ்மி சரவணகுமார் ஏற்கனவே எழுதியிருக்கார்யா, என்று. … Read more

ராஜேஷ், அராத்து, கணேஷ் அன்பு, பிரபு காளிதாஸ்…

மேலே சொன்ன பட்டியலில் செல்வகுமாரையும் சேர்க்க வேண்டும்.  ஆனால் அவர் எழுதியதை இன்னும் தொகுக்காமல் இருக்கிறார்.  பிரபு காளிதாஸ் பற்றி நான் எழுதியதற்கு அராத்து முகநூலில் எழுதியதும் அடியேன் அதற்கு எழுதிய பதிலும்… கொஞ்சூண்டு வெளில தெரியிர மாதிரி ஆளாயிட்டாலே மூளையைச் சுத்தி வேலி போட்டுப்பாங்க ! பெரிய பாறாங்கல்லை தூக்கி தலைல வச்சிகிட்ட மாதிரியே திரிவாங்க. ஐகான் ஆயிட்டா கேக்கவே வேணாம்.அக்குள்ள கையை வுட்டு கிச்சி கிச்சாங்க் பண்ணா கூட , 45 டிகிரி தலையை … Read more

எனக்குப் பிடித்த ஒரு தொகுப்பு…

சென்ற ஆண்டா, அல்லது அதற்கும் முந்தின ஆண்டா, ஞாபகம் இல்லை.  தற்கொலைக் குறுங்கதைகள் என்ற அட்டகாசம் நடந்தது.  வழக்கம் போல் எழுத்தாளர்கள் மூடிக் கொண்டு விட்டார்கள்,  இந்தக் குப்பையை எல்லாம் பற்றி நாம் பேச வேண்டுமா என்று.  இந்த உயிர்மைக்காரனுக்கும் வேறு வேலை இல்லை; எந்தெந்தக் கருமத்தையெல்லாம் போட்றான்.  ஒருத்தரும் என்னிடம் சொன்னதில்லை.  அவர்கள் நினைத்தது எனக்குத் தெரியும். இந்த ஆண்டு அப்படி ஒரு அட்டகாசம் நடக்கப் போகிறது.   பிரபு காளிதாஸ்.  இதெல்லாம் இண்டர்நெட் வந்த … Read more

Rockstar

எந்நேரமும் படித்துக் கொண்டேயிருப்பதால் கொஞ்சம் ஓய்வு எடுக்கலாமே என்று எனக்குப் பிடித்த இந்தி நடிகரான ரன்பீர் கபூர் நடனமாடிய பாடல்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.  யே ஜவானி ஹே திவானி என்ற படத்தைப் பார்த்ததிலிருந்து நான் ரன்பீரின் ரசிகன்.  அந்தப் படத்தில் பத்தமீஸ் தில் என்ற பாடலுக்கு அவர் ஆடிய நடனத்தைப் பல நூறு பார்த்திருப்பேன். https://www.youtube.com/watch?v=ddfXcATO-r4  அது ஒரு வித்தியாசமான படமும் கூட.  இப்படியாக இன்று ரன்பீரின் ஆடல் பாடல்களைப் பார்த்துக் கொண்டிருந்த போது ராக்ஸ்டார் என்ற … Read more

ஒரு நேர்காணல்

(பேட்டி எடுத்தவர்: பிச்சைக்காரன் சூர்ய கதிர், ஃபெப்ருவரி 2015) 1) ஒரு படைப்பின் கருத்தை விமர்சிக்காமல் படைப்பை உருவாக்கியவரைப் பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்யும் சூழல் அண்மைக் காலமாக பெருகி வருகிறது. நாவலில் கூறப்பட்ட புனைவுகளை உண்மை என நினைப்பதும், உண்மையை கற்பனை என நினைப்பதுமான இந்தப் போக்கு பற்றி என்ன நினைக்கிறீர்கள்? பொதுவாகவே தமிழில் ஒரு நவீன இலக்கியப் படைப்பை எப்படி வாசிப்பது என்பது பற்றிய புரிதலோ முன்மாதிரியோ இங்கே இல்லை. ஐரோப்பிய மொழிகளில் ரீடர் … Read more

கல்புர்கி கொலை (3)

  என்னுடைய முகநூல் பக்கத்தில் நண்பர் அருணாச்சலம் என்னுடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தார்.  உடனே அவருடைய (முகநூல்) நண்பர்கள் ஒரு சக எழுத்தாளனின் படுகொலையை ஆதரித்து எழுதியவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள உங்களுக்கு எப்படி மனம் வந்தது என்று கேட்டு அவரை வறுத்திருந்தார்கள்.  அதற்கு நண்பர் அருணாச்சலம் எழுதியிருந்த பதில் என்னை மிகவும் வருத்தமடைய வைத்தது.  அருணாச்சலத்தின் பதில் கீழே: ”நான் சாருவின் நீண்ட கால நண்பன். மேலும் நான் மதிக்கும் ஒரு ஆளுமையும் … Read more