ரெண்டாம் ஆட்டம் – இலவசமாக

  சனி மற்றும் ஞாயிறு அன்று கிண்டலில் ரெண்டாம் ஆட்டம் நூலை இலவசமாக பதிவிறக்கிக் கொள்ளலாம். https://www.amazon.in/ebook/dp/B07DCZYRB3 ***   ரெண்டாம் ஆட்டம் நூலுக்கு எழுதிய முன்னுரை: நான் அடிக்கடி சொல்லி வருவது போல் என்னுடைய எழுத்து வெறுமனே படித்து இன்புறுவதற்கான பண்டம் அல்ல. ஒரு கலாச்சார அரசியல் செயல்பாட்டின் அங்கமாகவே என் எழுத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். நான் கடந்த முப்பது ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட சிந்தனைப் போக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறேன். ’எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்’ என்ற நாவலிலிருந்து … Read more

கஸல் காஸின் கவிதை

நிசிகளின் பிரேத கணங்களில் ஒன்று நான் உறங்கியிருக்க வேண்டும் அல்லது உன்மத்தங்களின் பிடியில் லயித்திருக்க வேண்டு்ம்.. நான் வெறுமனே இந்த இரவை பார்த்திருக்கிறேன்.. பச்சைகட்டங்கள் சூழ்ந்திருக்கும் உலகில் எனக்கென்று கேள்விகளும் இல்லை பதில்களும் இல்லை.. நான் மெளனித்திருக்கிறேன்.. நீ கடந்துபோகும் சிலநூறு பெண்களுள் என் பக்கங்கள் சற்று அசுவாரசியமானவை.. நான் சுயமிகள் எடுப்பதில்லை,நீளநீளமாய் கட்டுரைகள் எழுதுவதில்லை..அரசியலும் இலக்கியமும் பேசுவதில்லை மாறாக நான் இருக்கிறேன்.. இருத்தலின் நிமித்தம் இருத்தல்தான் என்பதை முழுதாக நம்புவதால் உங்களின் பரிபாஷனைகளில் நான் ஈடுபடுவதில்லை. … Read more