புனைவும் வாழ்வும்

நன்றி: புதிய தலைமுறை, 14 ஜூன் 2018 தங்களின் சுயசரிதையைத்தான் ஸீரோ டிகிரி முதல் எக்ஸைல் வரை எழுதியிருக்கிறீர்கள். கோணல் பக்கங்கள் மாதிரியான கட்டுரைப் புத்தகங்களிலும் அப்பட்டமாக உதிரி உதிரியாக உங்கள் வாழ்க்கையை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். காந்தியின் சத்திய சோதனை மாதிரி உங்கள் சுயசரிதையை நேரடியாகவே எழுதினால் என்ன? யாழினி பார்வதம், சென்னை ஓர் எழுத்தாளர் தன் வாழ்வையம் புனைவையும் கலந்ததான் எழுத முடியும். இதை நான் மட்டுமே முதல் முதலாகச் செய்யவில்லை. நமது முன்னோடிகளான க.நா.சு., சி.சு. செல்லப்பா, … Read more

இதிகாசங்களைத் திரும்ப எழுதுதல்

நன்றி: தடம், ஜூன் 2018 இராமாயணம், மகாபாரதம் போன்ற காவியங்களின் கதைகளை திரும்பத் திரும்ப எழுதிப் பார்பது நடக்கிறதே. அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? இன்றைய இந்தியா முழுவதுமே இந்தப் போக்கு இருந்து வருகிறது.  அதுவே தமிழிலும் பிரதிபலிக்கிறது.  இதை ஒருவிதமான இந்துத்துவ மீட்டுருவாக்கம் என்றே சொல்ல வேண்டும்.  சி.சு. செல்லப்பாவும், க.நா.சு.வும் தொடங்கி வைத்த நவீனத்துவம் (modernism) பின்னர் பின்நவீனத்துவமாக மாற்றம் அடைந்து இப்போது சடாரென்று திரும்பி 100 ஆண்டுகள் பின்னே போய் விட்டது.  … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள் மூன்றாம் பாகம் முன்பதிவு

https://tinyurl.com/pazhuppu3 பழுப்பு நிறப் பக்கங்கள் மூன்றாம் பாகத்துக்கு இரண்டாம் பாகம் அளவுக்கு வரவேற்பு இல்லை. காரணம், இரண்டாம் பாகத்துக்கு நான் ஒவ்வொரு நண்பராக போன் செய்து ஞாபகப்படுத்தினேன். இப்போது அப்படிச் செய்யவில்லை. நான் போன் பண்ணாவிட்டாலும் என்னுடைய மிக நெருங்கிய நண்பர்களான 500 பேர் வாங்கி விடுவார்கள் என்ற நம்பிக்கையே காரணம். உண்மையில், மூன்றாம் பாகம் இரண்டாம் பாகத்தை விட முக்கியமானது. சி.சு. செல்லப்பா, கு.ப.ரா. ஆகிய இருவரும் இதில்தான் இருக்கிறார்கள். மேலும், ப. சிங்காரம். அவருடைய … Read more