லெபனான்
சென்ற ஆண்டு ஷார்ஜா புத்தக விழா என்னைப் பெரிதும் ஏமாற்றி விட்டது. என்னிடம் சமகால அரபி எழுத்தாளர்கள் மிக அபூர்வமான நாவல்கள் உள்ளன. இல்லாதவை பல. அவர்களின் படைப்புகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன். உதாரணமாக, இப்ரஹீம் நஸ்ரல்லாவின் Prairies of Fever என்ற நாவல். நஸ்ரல்லா ஜோர்டானில் வசிக்கிறார். அரபு இலக்கியத்தின் பின்நவீனத்துவ அடையாளம் நஸ்ரல்லா. இந்த நாவலை ஜோர்டான் அரங்கில் தேடினேன். அரபியில் இருந்தது. ஆங்கிலத்தில் இல்லை. இதேபோல் நான் தேடிய எழுத்தாளர்கள் ஐம்பது பேர் இருப்பார்கள். … Read more