வெட்கக் கேடு…

நேற்று இரவு முழுவதும் என்னால் உறங்க முடியவில்லை. ஹாண்ட்கேவுக்கு நோபல் கொடுப்பது என்பது ஹிட்லருக்கு உலக அமைதிப் பரிசு கொடுப்பதற்கு சமம். மிக வெளிப்படையாகவே ஐரோப்பா இஸ்லாமிய வெறுப்பைக் கக்குகிறது. உலகம் பூராவும் இந்தப் பரிசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஹிட்லரின் வதைமுகாம்களில் கூட விஷவாயு கொடுத்துதான் கொன்றார்கள். ஆனால் ஸராயீவோவில் எல்லா முஸ்லீம் பெண்களையும் கற்பழித்துக் கொன்றார்கள். அவர்களின் முதுகில் கத்தியினால் சிலுவை வரைந்தார்கள். பத்து வயது சிறுமி கூட முப்பது பேரால் வன்கலவி செய்யப்பட்டாள். … Read more

நோபல் (2)

ஸிஸெக்கும் சூஸன் ஸொண்டாகும் நோபல் ஹாண்ட்கேயை காறி உமிழ்கிறார்கள். கீழே படியுங்கள்: While initially left-leaning in his youth, his increasingly pro-Milosevic stance saw many writers distance themselves from him in the 1990s. After the end of the three-year Serbian siege of Sarajevo, he claimed that the Muslims had staged their own massacres in Sarajevo and had blamed this … Read more

நோபல் (1)

ஹாண்ட்கேவுக்கு நோபல் கிடைத்திருப்பது நோபல் பரிசின் அவலத்தைக் காட்டுகிறது. ஹிட்லரை ஆதரிக்கும் ஒருவருக்கு இலக்கியப் பரிசு கொடுப்பதற்குச் சமம். ஹாண்ட்கேவுக்குப் பரிசு கொடுத்திருப்பதன் மூலம் இனவாதம், இஸ்லாமிய எதிர்ப்பு ஆகியவற்றுக்கு நோபல் கமிட்டி அங்கீகாரம் அளித்திருக்கிறது. மனித வரலாற்றிலேயே காண இயலாத கொடூரங்களை போஸ்னிய இஸ்லாமியருக்கு எதிராக நிகழ்த்தியவர்களை மிக வெளிப்படையாக ஆதரிக்கும் ஹாண்ட்கேவுக்கு இலக்கிய நோபல் பரிசு! இதை அடுத்து அமெரிக்க அதிபரும் முன்னாள் WWF ரவுடியுமான ட்ரம்புக்கு உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கலாம். … Read more

இரண்டு புத்தகங்கள்

https://tinyurl.com/vetrulaga வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள் என்ற இந்த நூலை பிழைதிருத்தம் செய்து கொண்டிருந்த போது ஏதோ ஒரு நாவலைப் படிப்பது போலவே இருந்தது. இந்த நூல் உங்களிடம் இருந்தால் மீண்டும் வாங்கி உங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுக்கலாம். திட்ட மாட்டார்கள். தைரியமாகக் கொடுக்கலாம். பின் வரும் இணைப்பு மூலம் புத்தகத்தை வாங்க முடியும். https://tinyurl.com/vetrulaga இன்னொரு நூல் ரஜினிகாந்த்தின் சூரிய மேடு. இது “எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது” என்ற தலைப்பில் 2008-இல் வெளிவந்தது. நீண்ட காலமாக இந்நூல்கள் … Read more

பூனை உணவு

பூனைகளுக்கு நாங்கள் இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் உணவு அளிப்பது சில சக குடியிருப்புவாசிகளுக்குப் பிடிக்கவில்லை. கடுமையாக நெருக்கடி கொடுக்கிறார்கள். கார் வீணாகி விட்டது; ஸ்கூட்டர் வீணாகி விட்டது என்றெல்லாம் தொடர்ந்து புகார். எதுவும் வீணாகவில்லை; பொய்ப் பித்தலாட்டம். சரி, எடுத்து வாருங்கள், நான் என் செலவில் சரி செய்து கொடுக்கிறேன் என்று அவந்திகா சொன்னதும் வாயை மூடிக் கொண்டார்கள். பூனைகளால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லை என்பதே உண்மை. அவை காலையில் சாப்பிட்டு விட்டு எங்கோ போய் … Read more