ஒரு முக்கியத் திருத்தம்

பூச்சி – 14இல் வரும் நாயகன் கையில் வைத்திருப்பது மெழுகுவர்த்தி அல்ல. தோன் கெஹோத்தே (Don Quixote) நாவல். பாருங்கள், மோடியின் மெழுகுவர்த்தி என்னென்ன ஜாலமெல்லாம் காட்டுகிறது என்று. புத்தகம் – அதுவும் என்ன மாதிரி ஒரு புத்தகம் – மெழுகுவர்த்தியாக மாறி விட்டது என்றால், இது நிச்சயம் மஸ்தான் வேலை.

பூச்சி – 14

இல்லை, இன்னமுமே பதில் சொல்லி முடித்து விட்டதாகத் தோன்ற மாட்டேன் என்கிறது.  ஏனென்றால், இலக்கியத்தினால் எந்தப் பயனும் இல்லை; ஏன் இலக்கியம் வாசிக்க வேண்டும் என்பது போன்ற கேள்விகளுக்கு நான் நாற்பது ஆண்டுகளாக பதில் சொல்லிக்கொண்டு வந்தாலும் எனக்கு இன்னும் சரியான பதிலை சொல்லி விட்டதாகத் தோன்றவில்லை.  ஒரே வார்த்தையில் சொல்கிறேன்.  நேற்று நான் எழுதிய மூன்று கட்டுரைகளின் மொத்த வார்த்தைகள் 4267.   இன்னும் நேரம் கிடைத்திருந்தால் இன்னும் நாலாயிரம் வார்த்தைகளை எழுதியிருப்பேன்.  இத்தனை வார்த்தைகளை எந்தச் … Read more