பூச்சி 42

அய்யங்கார்களின் மரபணு – பொதுவாகவே பிராமணர்களின் மரபணு பற்றி எழுதினேன்.  அதில் இன்னும் நிறைய பாக்கி உள்ளது.  ஸ்ரீரங்கத்தில் பார்த்திருக்கிறேன்.  அய்யங்கார் பையனும் அ-பிராமணப் பையன்களும் ஒன்றாகச் சேர்ந்து குடித்துக் கும்மாளம் அடித்துக் கொண்டு கிடப்பான்கள்.  கல்லூரி மாணவர்கள்.  தேர்வுகள் வரும்.  அ-பிராமணப் பையன்கள் தேர்வில் தோல்வி அடைந்து விடுவான்கள். அய்யங்கார் பையன் மட்டும் நூற்றுக்குத் தொண்ணூற்றெட்டு வாங்கித் தேர்ச்சி அடைவான்.  இத்தனை எடுத்தும் மெடிக்கல் கிடைக்கவில்லை; இட ஒதுக்கீடே கூடாது என்றும் புலம்புவான்.   அதன் பிறகு … Read more

பூச்சி – 41

கம்யு ஒரு அல்ஜீரியனாகவே இருந்தாலும், தன் வாழ்நாள் முழுதும் மக்ரிப் அரபிகளையே ஆதரித்தாலும் அல்ஜீரியர்கள் கம்யூவைத் தங்கள் நினைவிலிருந்து துடைத்து அழித்து விட்டதற்குக் காரணத்தை உங்களில் யாராவது என்னுடைய சார்த்தர் பற்றிய கட்டுரைகளை ஞாபகத்தில் வைத்திருந்தால் இப்போது சொல்லி விடலாம்.  சார்த்தருக்கு அல்ஜீரியர்களை நேரடியாகத் தெரியாது.  அவர் ஒரு தத்துவவாதி.  அதிலும் அவரது தத்துவத்தின் மூலக்கூறுகளை அவர் ஜெர்மன் தத்துவவாதிகளிடமிருந்து பெற்றிருந்தார்.  ஜெர்மன் தத்துவவாதிகளோ – நீட்ஷேவையும் மார்க்ஸையும் தவிர்த்து – நேரடி வாழ்விலிருந்து பெரிதும் அந்நியமானவர்கள்.  … Read more