பூச்சி 40

வரலாற்றுத் தகவல்களைக் கொடுக்கும்போது அந்தக் காலத்து சினிமா பாட்டுப் புத்தகங்களில் கதைச் சுருக்கம் என்று போடுவார்களே அதை விடவும் கம்மியான அளவில்தான் விபரங்களைத் தெளித்துச் செல்கிறேன்.  இல்லாவிட்டால் இந்த நூல் ஆயிரம் பக்கங்களையும் தாண்டி விடும்.  உதாரணமாக, ஸ்பெய்னிலிருந்து தென்னமெரிக்கா சென்ற பாதிரியார்களில் ஒருவரான பார்த்தொலோமெ தெ லாஸ் காஸாஸ் (Bartolome de Las Casas) எழுதிய A Brief Account of the Destruction of the Indies என்ற 50 பக்க புத்தகத்திலிருந்து ஒரு … Read more

யானையைத் தின்பது : வளன்

ஒரு யானையைத் தின்பது எப்படி? பொறுமையாக  ஒரு வேளைக்கு ஒரு கடி. இப்படி யானையைத் தின்பது போலதான் இந்த மரணத்தின் நாட்களைக் கடக்க வேண்டியிருக்கிறது. சுத்தமாக இருக்கச் சொல்லி எங்கிருந்தோ உத்தரவு வருகிறது பத்து நபர்களுக்கு மேல்  யாரும் சேர்ந்திருக்கக் கூடாது என்கிறார்கள் தனித்திருக்கச் சொல்கிறார்கள் இருமினாலோ தும்மினாலோ அனைத்து கண்களும் பயத்தையும் சந்தேகத்தையும் உமிழ்கின்றன மூடப்பட்ட வழிபாட்டுத்தலங்களில் கடவுளர்கள் தனிமையிலிருக்கிறார்கள் எப்போது மாறும் இந்த நிலை  என்பதுதான் பலரது கேள்வி. இந்த நிலை மாறும் இன்னொரு … Read more

பூச்சி – 39

முடிதிருத்தும் கலைஞர் பெயர் ரமேஷ் என்றா சொன்னேன்?  அடடா, தவறு.  ரமேஷ் என்ற பெயரிலும் ஒரு கலைஞர் இருக்கிறார்.  நான் குறிப்பிட்டது மகேஷ்.  நேற்று எழுதியதை நான் திரும்பப் படிக்கவில்லை.  ஆனால் கனவில் நான் எழுதியது ரமேஷ் என்று புலப்பட்டது.  இப்படி பகலில் செய்யும் தவறுகள் இரவில் கனவில் சுட்டிக்காட்டப்படும்.  உங்களுக்கும் இப்படி நடக்குமா தெரியவில்லை.  எனக்குப் பல முறை நடந்துள்ளது.  ரமேஷ், மகேஷ் இருவருமே கலைஞர்கள்.  இருவருமே ஜெமினி அருகில் முடிதிருத்தகம் வைத்திருக்கிறார்கள்.  இருவருமே வி.ஐ.பி.  … Read more