பூச்சி – 35

சமீபத்திய என் கட்டுரைகளைப் படித்து சிலருக்கு சாரு இந்துத்துவத்தின் பக்கம் சாய்ந்து விட்டாரோ என்று தோன்றலாம்.  ஒவ்வொரு பிரச்சினையையும் எப்படி அணுக வேண்டுமோ அப்படி அணுகுவதே என் வழக்கம்.  மற்றபடி நான் எக்காலத்திலும் எந்த மதத்துக்கும் சார்பானவன் அல்ல.  இஸ்லாம் என்றால் இஸ்லாத்துக்கு வெளியே உள்ள சூஃபிகளின் மாணவன் நான்.  கிறித்தவம் என்றால், அங்கே நான் OPUS DEI போன்ற தீவிரவாதிகளுக்கு எதிரானவன்; John of the Cross-இன் சீடன்.  இந்து மதம் என்றால் அங்கே நான் … Read more

பூச்சி – 34

கணேஷ் அன்புவின் கடிதம். கடிதத்தின் ஆரம்பத்தில் எனக்கு ஒரு பாராட்டு வார்த்தை உள்ளது.  ”உங்களது அர்ப்பணிப்பும், மெனக்கெடலும் மேலும் மேலும்  என்னை வியக்க வைக்கிறது என்று சொல்லிவிட்டே மேற்கொண்டு தொடர்கிறேன்.”   ஏன் ஐயா, யாரை யார் பாராட்டுவது?  நட்பின் காரணமாகத் தோள் மீது கை போட்டால் இருவரும் சமம் என நினைத்துக் கொள்வதா?  அமார்த்யா சென்னிடம் போய் “உங்கள் அர்ப்பணிப்பு என்னை வியக்க வைக்கிறது” என்று சொல்ல முடியுமா?  சொல்லலாம்.  சொல்பவர் அமார்த்யா சென்னை விடப் பெரிய … Read more