புதிய அரங்கம்

புதிய அரங்கம் – சென்னையில் புத்தக வெளியீடு, திரையிடல் நிகழ்வுகள் நடத்த… நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் வடபழனி அலுவலகத்திற்கு ஏப்ரல் 14ஆம் தேதி குடிபெயரவிருக்கிறோம். வடபழனியில் மிக அருமையான சினிமாவிற்கான ஒரு ஒருங்குகூடலாகவே இந்த அலுவலகம் திகழும். அலுவலகம் என்பதை தாண்டியும், இன்னொரு முக்கியமான பொது பயன்பாட்டிற்கும் இந்த இடம் உதவப்போகிறது. அது பற்றி பின்னர் அறிவிக்கிறேன். ஆனால் இன்னொரு வகையிலும் நண்பர்கள் தமிழ் ஸ்டுடியோ அலுவலகத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். தமிழ் ஸ்டுடியோவின் அலுவலகத்தில் நாற்பது பேர் … Read more

மனிதாபிமானிகளின் அக்குறும்பு…

அவந்திகாவிடம் நான் அடிக்கடி சொல்வதுண்டு, நல்லவர்களை விட எனக்குத் திறமைசாலிகளே தேவையாக இருக்கிறார்கள் என்று.   நல்லவர்கள் என்னைப் போலவே பேக்குகளாக இருக்கிறார்கள். அதேபோல் இன்னொரு டார்ச்சர் பேர்வழிகள் மனிதாபிமானிகள்.  அடிக்கடி அவர்களை நான் நண்பர்களாக அடையும் பேறு பெறுகிறேன்.  அப்படிப்பட்ட மனிதாபிமானிகள் போனில் அழைத்தால் எடுக்காமல் போன் அழைப்பை வெட்டி விட்டு அவர்களே அழைப்பார்கள்.  காரணம், என்னுடைய செலவைக் கட்டுப்படுத்துகிறார்களாம்.  எப்போது பார்த்தாலும் நான் ஏழை, பணத்துக்கு சிரமப்படுகின்றவன் என்றேவா ஒருத்தரின் மனதில் என்னைப் பற்றிய … Read more

இச்சைகளின் இருள்வெளி – ஒரு மதிப்புரை

இச்சைகளின் இருள்வெளி நூலுக்கு டாக்டர் ஸ்ரீராம் மதிப்புரை எழுதியுள்ளார். *** நாம் சினிமாவில் என்ன பார்ப்போம்? பாலியல் தொழிலாளியை கதாநாயகன் காதலித்து, அவளை மீட்பான்; அவள் வாழ்க்கை அதன்பின் வசந்தமாகும். ஆனால், நிதர்சனத்தில் அப்படி இல்லை. அவளுக்கு குழந்தையைக் கொடுத்துவிட்டு, அவன் பெரும்பாலும் ஓடிவிடுகிறான். அந்த குழந்தையும் வளர்ந்து பாலியல் தொழிலாளி ஆகுகிறாள். இவ்வாறு, நம் பொதுபுத்தியில் பதிந்திருக்கும் பல விசயங்களை கட்டுடைக்கிறார்கள் இருவரும். மேலும் படிக்க: http://sriramintamil.blogspot.in/2016/03/blog-post_24.html

Charu Nivedita – An Installation by N.Srinivasan

புத்தக வெளியீட்டு விழா அரங்கில் ஓவியர் ஸ்ரீனிவாசனின் installation பற்றி டாக்டர் ஸ்ரீராம் எழுதியுள்ளார். “சாரு, வலது கீழ் மூலையில் ஏன் square வச்சிருக்காரு, ஏன் கீழ சாரு நிவேதிதான்னு பேர் இருக்கு? இதை ரெண்டையும் எடுக்க சொல்லிரலாமா?” என்று சாருவிடம் ஞானசூன்யமாகக் கேட்டேன். அவரும், “எடுக்க சொல்லிருங்க,” என்றார். தொலைபேசியை வைத்தவுடன் திரும்பவும் அழைத்து, “ஸ்ரீராம், உங்களுக்கும் இதைப் பத்தி தெரியாது, எனக்கும் தெரியாது. அந்த square-உம் கீழே இருக்கும் பேரும் ஏதோ காரணமாகத்தான் வச்சிருப்பார்; … Read more

கல்கி நேர்காணல்

இந்த வார கல்கியில் என் நேர்காணல் வந்துள்ளது.  ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர் பேட்டி மாதிரி இல்லாமல் ஒரு எழுத்தாளனின் பேட்டி போல் வந்துள்ளது.  அமிர்தம் சூர்யாவே காரணம்.   அவருக்கு என் நன்றி.

பிச்சைக்காரன் – விமர்சனம் (திருத்தப்பட்டது)

நண்பர் சசியின் இயக்கத்தில் வெளிவந்து சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் பிச்சைக்காரன் படத்தைப் பார்த்த சூட்டோடு எழுதுகிறேன்.  படம் பிடிக்கவில்லை.  ஓ ஓ ஓ என்று படம் பூராவும் அம்மா பாச அசரீரி செவியைக் கிழிக்கிறது.  பின்னணி இசை கோரம்.  சகிக்கவில்லை.  இசை மிகப் பெரிய குறை.  சண்டைக் காட்சிகள் படு மோசம்.  படத்தில் எனக்குப் பிடித்த இடம், நாயகி டைட்டஸ், விஜய் ஆண்டனியின் கைகளில் முகம் புதைத்து அழும் காட்சி.  நானும் அழுது விட்டேன்.  இரண்டு … Read more