“பிரபஞ்ச பிரதிவினை”

செப்டெம்பர் 27, 2016 எதிர் பதிப்பகத்தின் அனுஷ் தங்கமான இளைஞர். என் நண்பர். என்னுடைய நாவல் எதிர் மூலமாகத்தான் வர வேண்டும் என்பது என் ஆசைகளில் ஒன்று. எதிர் பதிப்பகத்தின் புத்தகத் தயாரிப்பு அவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது. ஆனாலும் எதிர் பதிப்பகத்தின் மொழிபெயர்ப்பு நூல்களை இனிமேல் வாங்குவதில்லை என்று மயிலாப்பூர் முண்டக்கண்ணி அம்மன் சந்நிதியில் இன்று சத்தியம் செய்தேன். வன்முறையில் எனக்கு நம்பிக்கை இல்லை. இருந்தாலும் கண் முன்னே என் தமிழ் வன்கலவி செய்யப்படுவதைப் பார்த்து ரத்தம் … Read more

இளையராஜா, ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் ஒரு விஞ்ஞானி

செப்டெம்பர் 27, 2016 எழுத்தாளர்களெல்லாம் அடித்துக்கொள்கிறார்கள் என்று பலரும் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். தமிழ்நாட்டில் யாரும் இலக்கியம் படிக்காமல் இருப்பதற்கு அதுதான் காரணம் என்று சொல்லி, உங்களுக்குள் ஒற்றுமையாக இருங்கள்; ஒருநாள் நீங்கள் ப்ரஸீல் போகலாம் என்று ஒரு பிரபல விஞ்ஞானி எனக்கு அருள் வாக்கு சொன்னார். இன்றைய இந்துவில் வந்திருந்தது இது: இளையராஜா அமெரிக்கா சென்றிருக்கிறார். அங்கே சிலர், ஏ.ஆர். ரஹ்மான் உங்களிடமிருந்து இசையைத் தொடர்கிறார்; அவர் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்க அதற்கு … Read more

ரெண்டு தஞ்சாவூர்க்காரன்கள் – குறுங்கதை

செப்டெம்பர் 25, 2016 ஒருத்தன் இன்னொருத்தனைத் தேடி வந்தான். இன்னொருத்தன் தன் பூனைக்கு தோட்டத்தில் வைத்து மீன் போட்டுக் கொண்டிருந்தான். ரெண்டு கையிலும் மீன். பூனை சாப்பிட நேரமாயிற்று. அவனோடு கொஞ்சிக் கொண்டும் மிஞ்சிக் கொண்டும் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. ஊடே ஊடே ஏதாவது பெரிய மிருகம் வந்து தன் வாயிலிருக்கும் மீனைப் பிடுங்கிக் கொள்ளுமோ என்ற சந்தேகத்தில் சுற்றுமுற்றும் பார்த்துக் கொள்ளவும் செய்தது. தனக்குப் பிரியமான இந்த மனிதன் நிற்கும் போது எந்த மிருகமும் குறுக்கே வர … Read more