தொலைதூரத்து நண்பர்கள்…

ஒருநாள் ஈரோட்டிலிருந்து கோபிக்கு நானும் நண்பரும் காரில் சென்று கொண்டிருந்தோம்.  காரில் என்று எழுதியதும் ஜெயமோகன் ஞாபகம் வருகிறது.  சே…  தம்பி ஞாபகம் இல்லாமல் ஒரு வார்த்தை எழுத முடியவில்லையே, என்னைக் காப்பாற்று இறைவா!  சரி, விஷயம்.  கோபிக்குச் சென்று அங்கே உள்ள நந்தினி உணவகத்தில் சாப்பிட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம்தான் பயணத்தின் காரணம். என்னென்ன சாப்பிட்டோம் என்பதெல்லாம் நினைவில் இல்லை.  ஆனால் சங்க காலத் தமிழர்கள் இப்படித்தான் சாப்பிட்டிருப்பார்கள் என்று தோன்றியது.  இப்படி ஒரு … Read more

லா.ச.ரா.வின் எழுத்தில் கரைந்த இன்னொரு இதயம்…

மதிப்பிற்குரிய சாரு நீங்கள் லா.ச.ரா வை பற்றி ஆற்றிய உரையை கண்டேன். உண்மையான உணர்ச்சிகளுடன் ஆத்மார்த்தமாகப் பேசியதாகத் தோன்றியது. எனக்கு மிகவும் பிடித்த என்று சொல்வதைவிட எனக்கு வாசிப்பனுபவத்தின் உன்னதத்தை விளக்கியவர் லா.ச.ரா என்று கூறுவேன். இத்தனைக்கும் எந்த வித முன்னறிமுகமும் இல்லாமல் அவரை வாசிக்கத் தொடங்கியது இன்னும் என் நினைவில் இருக்கிறது. ஒரு 2 மணி நேர பேருந்து பிரயாணத்தில் நேரம் கடத்துவதற்காக என் அம்மாவின் புத்தக அலமாரியின் மூலையில் இருந்த கழுகு நாவலை படிக்கலாம் … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள் : தி.ஜா. பகுதி 2

இன்று மதியம் தான் ஒரு நண்பருடன் சேர்ந்து முடிவு செய்தோம்.  பழுப்பு நிறப் பக்கங்கள் முடிவடைந்த பிறகு மொத்தமாகக் கொண்டு வந்தால் பக்கங்கள் அதிகமாகி அதைக் கையில் வைத்து வாசிப்பது சிரமமாகி விடும் என்பதால் தொகுதி தொகுதியாகக் கொண்டு வரலாம் என்பதே அந்த முடிவு.  முதல் தொகுதி ஜனவரி 9-ஆம் தேதி ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடக்க இருக்கும் விழாவில் வெளியிடப்படும்.  க.நா.சு.வோடு முதல் தொகுதி முடியும். பின்வரும் இணைப்பில் உள்ளது தி.ஜா. பற்றிய கட்டுரையின் இரண்டாம் … Read more

நிலவு தேயாத தேசம் – 3

http://andhimazhai.com/news/view/nilavu3.html வெள்ளிக் கிழமைதோறும் சாரு நிவேதிதா எழுதும் இத்தொடர் அந்திமழையில் வெளியாகும் (இந்த வாரம் இரண்டு நாள் தாமதம். மன்னிக்கவும்)