சாபத்தை வரமாக மாற்றுவதற்கு ஓர் எளிய வழி

சார்,  உங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. எனக்கு எந்தவித இசை அறிவும் கிடையாது. பின்வரும் இரு பாடல்களும் எனக்கு ஒரே மாதிரி தெரிகின்றன. நேரமிருந்தால் கேட்டுப் பாருங்கள். உங்களுக்கு அப்படித் தோன்றவில்லை என்றால் உங்கள் நேரத்தை எடுத்துக் கொண்டதற்காக மன்னியுங்கள். சாபம் ஏதும் தரவேண்டாம். ஏற்கனவே அப்படி ஒரு வாழ்வைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நன்றி! லெனி டியர் லெனி, நான் ஏன் சாபம் தரப் போகிறேன்?  ஒன்று தெரியுமா உங்களுக்கு?  நான் யாருக்குமே இதுவரை சாபமே தந்ததில்லை.  … Read more

ஒரு சுவாரசியமான வாழ்த்துச் செய்தி

சாருவுக்கு வாழ்த்துகள் நவீன தமிழ் இலக்கியத்தை ஒரு சிறு கூட்டத்திலிருந்து பெரும் கூட்டத்துக்குக் கடத்தியதில் என் தலைமுறையில் நால்வருக்குப் பெரும் பங்கு உண்டு. ஜெயமோகன், சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன். இப்படிச் சொல்லும்போது ஏனையோர் பங்களிப்பை நான் மறுதலிக்கவில்லை. அதேபோல, தமிழ் இலக்கியத்தில் என்னுடைய ஆதர்ஷங்களும் இவர்கள் இல்லை. ஆனால், இலக்கியம் தெரியாதவர்களிடமும் இலக்கியம் குறித்த மதிப்பைக் கூட்டியவர்கள் இவர்கள். அதனாலேயே, ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் பணியாற்றுகையில் ஒவ்வொரு புத்தகக்காட்சி சிறப்பிதழ்களின் நிறைவு நாளிலும் இவர்கள் … Read more

நான்தான் ஔரங்ஸேப்… முன்பதிவுத் திட்டம் (இன்னும் இரண்டு தினங்கள்)

நான்தான் ஔரங்ஸேப் இன்னும் இரண்டு தினங்களில் கைக்கு வந்து விடும்.  முன்வெளியீட்டுத் திட்டத்தில் சலுகை விலையில் நாவலை வாங்க விரும்புபவர்கள் இந்த இரண்டு தின்ங்களில் பணம் அனுப்பினால் அதனால் இரண்டு அனுகூலங்கள்.  சலுகை விலையில் கிடைக்கும்.  இரண்டு, நாவலில் என் கையெழுத்தும் இருக்கும்.  அதற்கான விவரங்கள்:   https://tinyurl.com/naanthaanaurangazeb

விநாயகர் சதுர்த்தி

இந்து கடவுள்களில் எனக்கு ஆகப் பிடித்தவர் விநாயகர். அப்பனைப் போல் சுடுகாட்டில் இல்லாமல் குளத்தாங்கரையில் போய் அமர்ந்தவர் அல்லவா, யாருக்குப் பிடிக்காமல் இருக்கும்? ஸ்விக்கி மூலம் எல்லாவற்றையும் வாங்கி விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதிலும் இந்த டன்ஸோ இருக்கிறதே, அது ஒரு புரட்சி. நேற்று கூட தற்சமயம் கோயம்பத்தூரில் இருக்கும் ஸ்ரீராம் டன்ஸோ மூலம் ஜார்ஜ் டவுனிலிருந்து மீன் தலைக் குழம்பு அனுப்பினார். அது ஒரு பெரிய கதை. டைனோசார் தலை சைஸ் இருந்தது. இன்று … Read more

விமர்சனத்தில் ஒரு இடம்!

நேற்று பிறந்த சிறுவர்களுக்கு நான் யார் என்று தெரியாது இல்லையா, அதனால் அவர்களுக்கு ஒரு விமர்சகனாகவும் என்னை நான் அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.  இதை அவர்கள் என் பயோடேட்டாவாகக் கருதாமல் ஒரு பாடத்திட்டம் என்று எடுத்துக் கொண்டால் அவர்களின் முன்னேற்றத்துக்கு நல்லது.  சர்வதேச இலக்கியம், இசை, நாடகம் குறித்து நான் எழுதியிருக்கும் ஏராளமான அ-புனைவு நூல்களை இப்போதைக்கு விட்டு விடுவோம்.  சில ஆண்டுகளுக்கு முன்பு பழுப்பு நிறப் பக்கங்கள் என்ற தலைப்பில் மூன்று தொகுதிகள் வந்துள்ளன.  சமகாலத் … Read more

அலுப்பூட்டும் இலக்கிய சூழல்

உலகில் அதிகம் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட பலவற்றில் உங்கள் பெயர் முக்கிய இடத்தை பிடித்துவிட்டது. இனி அதை அப்படியே வைத்திருக்கவே அவர்கள் விரும்புவார்கள்.தனி ஒரு எழுத்தாளன், தான் மட்டுமே தன்னை இலக்கியத்தில் ஒரு இடத்தில் அடையாளப்படுத்திக் கொண்டு அந்த இடத்திற்கு இடைவிடாத நிருபணங்களை தந்து கொண்டிருக்க வேண்டியுள்ளது. காழ்ப்பு கொண்டவர்கள் அவனை எழுத்து சார்ந்து மதிப்பிடாமல், இப்படி இடுப்புக்கு கீழேயே தாக்கி கொண்டிருக்க இதுவே காரணம்.அதுவும் மிகக்குறுகிய ஜானரில் மட்டும் வாசிப்பு பழக்கம் கொண்டவர்கள் வேறுவகை எழுத்தில் … Read more