இலக்கியமும் சினிமாவும்…

தளவாய் சுந்தரம் என் நீண்ட கால நண்பர்.  மிக நீண்ட காலம்.  என்னுடைய ராஸ லீலா நாவலில் ஒரு அத்தியாயத்தில் அவர் இடம் பெறுகிறார்.  அவர் பணி புரியும் வாவ் தமிழா இணைய இதழுக்கு நான் அளித்த பேட்டியின் பதிவை இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இந்தப் பேட்டியைக் கண்டதும் ஒரு முடிவு எடுத்தேன்.  இனிமேல் எந்தப் பத்திரிகைக்கும் பேட்டி அளிக்கும் போது சினிமா பற்றிய கேள்விகளுக்கு பதில் சொல்வதில்லை.  அது இப்போது எடுத்த முடிவு.  முடிவு … Read more

அன்பும் அடக்கமும்…

இப்படி ஒரு தலைப்பில் நான் ஒரு குறிப்பு எழுதுவேன் என்று நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. அந்த அளவுக்குத் தேய்வழக்காகி விட்ட சொற்கள் அவை. ஃபேஸ்புக்கில் நண்பர் அய்யனார் விஸ்வநாத் ஒரு பிரபல இசையமைப்பாளரையும் ஏ.ஆர். ரஹ்மானையும் ஒப்பிட்டு, ரஹ்மானின் மார்க்கெட்டிங் பற்றிப் புகழ்ந்திருந்தார். இப்போது ரஹ்மான் இருக்கும் இடத்துக்கு அவரது மார்க்கெட்டிங் முக்கியக் காரணம் என்பது நண்பரின் கருத்து. கே.ஏ. குணசேகரன் சம்பந்தப்பட்ட இசையமைப்பாளரைப் புகழ்ந்து – கிட்டத்தட்ட கடவுள் ரேஞ்ஜுக்கு – ஒரு புத்தகம் எழுதினார். … Read more

லும்பன் சூழ் உலகு: அராத்து

பீஸ்ட் பற்றிய பதிவில் லும்பன் என ஒரு வார்த்தையை குறிப்பிட்டு இருந்தேன். ஜகன் வெங்கடேஷ் என்ற நண்பர் ஒரு கமெண்ட் இட்டு இருந்தார். அவர் கமெண்ட் :- அது லும்பன் இல்லை “லம்பென்”lumpenproletariat – மார்க்சிய சிந்தனையில் மிகவும் இழிவான சொற்களில் ஒன்றாகும். மீதி கூகுள் …இந்த தமிழ் எழுத்தாளர்களால் (அதாவது தமிழ்ல எழுதறவங்க இலக்கியவாதியில்லை )நாம படற கஷ்டம் இருக்கே ஊபருக்கு பதிலா உபேர்னு கத்துகொடுப்பாய்ங்க..நாம அசிங்கப்பட்டு கஷ்டப்பட்டு அவமானப்பட்டு அத மாத்திக்கனும்அய்யா அந்த audio … Read more

தாசியின் வீடு

கேள்விகள் என்னைத் திக்பிரமை கொள்ளச் செய்கின்றன கேள்விகள் என்னைத் திணற  அடிக்கின்றன கேள்விகள் என்னை மூச்சு முட்ட வைக்கின்றன கேள்விகள் என்னை அச்சுறுத்துகின்றன காரணமென்னவென்று அந்தப் பக்கமாக  வந்த ஒரு அணுக்க தெய்வத்திடம் கேட்டேன் கேள்விகளின் கதவுகள் மூடியிருக்கின்றன உன்னுடைய உண்மை கேள்விகளின் கோட்டைக் கதவுகளைத்  திறக்க முடியாமல் வலுவற்று வீழும்போது திக்கித் திணறி ஒரு பொய்யைச் சொல்கிறாய் அவ்விதமாகத்தான் சிருஷ்டித்திருக்கிறான் படைத்தவன் விசனப்படாதே சிருஷ்டியை உன் தர்க்கம் கொண்டு புரிந்து கொள்வது கடினம்  என்றபடியே பக்கத்திலிருந்த … Read more

எத்தனை நாள் கிடந்த வாழ்வு

கவிதை என்னைத் தேடி வரவில்லை நானும்  தேடிப் போகவில்லை ஆனாலும் எப்படியோ சந்தித்துக் கொண்டோம் தாமதம்தான் சற்றுமுன் நடந்திருக்கலாம் எல்லாமே கொஞ்சம் முன்னால் நடந்திருக்கலாம்தான் உன் காயங்களுக்கு மருந்திடுவதற்காகவே வந்தேன் என்றது கவிதை என்ன காயமோ என்ன மருந்தோ பசித்த ஒரு நாயின் அழுகுரல் என் அமைதியைத் துளைக்க இறைச்சித் துண்டுகளை எடுத்துக் கொண்டு குரல் வந்த திசை நோக்கிச் சென்றேன் ஒரு துணுக்கைக் கூட விடாமல் விழுங்கியது நாய் எத்தனை நாள்  நொந்த பசி எத்தனை … Read more

சொற்கடிகை : 26. நண்டுக் குழம்பு

சுமார் ஆறு வயதிலிருந்து நண்டுக் குழம்புக்கும் எனக்குமான உறவு தொடங்குகிறது.  அசைவத்திலேயே எனக்கு ஆகப் பிடித்தது நண்டுக் குழம்புதான்.  நண்டு வறுவலை விட குழம்புதான் இஷ்டம்.  எல்லாவற்றிலுமே அப்படித்தான்.  உருளைக் கிழங்கு போன்ற ஒன்றிரண்டு ஐட்டங்கள் மட்டுமே வறுவல் பிடிக்கும்.  மற்றபடி எல்லாம் குழம்புதான்.  கொரோனா காலகட்டத்தில் இரண்டு ஆண்டுகளாக நண்டு சாப்பிடாமல் ஏக்கமாகப் போய் விட்டதால் அவந்திகா போரூர் ஏரியில் பிடித்த பெரிய உயிர் நண்டுகளை ஒரு நண்பர் மூலமாக வாங்கி வரச் சொல்லி, அந்த … Read more