ஸ்மாஷன் தாரா – 3

ஆதி அந்தமில்லாத காலப்பெருவெளியின் இந்தவொரு புள்ளியில் நாம் சந்தித்தது சந்தர்ப்பவசமோ விதிவசமோ தெரியாது மனிதக் கணக்கில் இருபது ஆண்டுகள் ஒன்றாயிருந்தோம் சட்டென்று கரைந்து விட்டாய் காலத்தில் அநந்தகோடி ஒளிப்புள்ளிகளில் ஒன்றாகிவிட்ட உன்னையினி சந்திக்க இயலுமோ சந்தித்தாலும் ஞாபகமிருக்குமோ இந்த இருபது ஆண்டுகளில் நாம் பேசிய வார்த்தைகளும் பேசாத மௌனங்களும் கூடலும் ஆடலும் வெறுப்பின் வெம்மை படிந்த பகல்களும் மோகத்தீயில் பற்றியெரிந்த இரவுகளும் எனக்காக உன்னை உருக்கிக் கொண்டதும் தங்கக் கூண்டில் எனைச் சிறைப்படுத்திய உன் பிரியத்தின் கூர்முனைகளும் … Read more

ஸ்மாஷன் தாரா – 2

ஆசைப்பட்டது கிடைக்கவில்லை துக்கமான துக்கம் ஆசையை விடு துக்கம் போகுமென்றானொரு ஆசான் விட்டேன் துக்கம் அகன்றது அப்போது வந்தாள் ஸ்மாஷன் தாரா என்ன வரம் வேண்டும் கேள் மகனே என்றாள் ஒரு ஐந்து நிமிடம் முந்தி வந்திருக்கக் கூடாதா உலகத்தையே கேட்டிருப்பேன் என்றேன் இப்போதும் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை கேளென்றாள் எதுவும் வேண்டாம் முடிந்தால் என்னோடு இரு என்றேன் அதற்கென்ன இருந்தால் போயிற்று என்றாள் கவிதை பிறக்கலாயிற்று

ஸ்மாஷன் தாரா

பிறந்து ஐந்து வயது வரை ஊமைப் பிள்ளை கலியப் பெருமாள் கோவிலுக்கு வேண்டிக் கொண்டுதான் பேச்சே வந்தது பேசிய பேச்சும் அசட்டுப் பேச்சு புத்தியும் இல்லாமல் போச்சு மந்தையைப் பிரிந்து அபீன் பழக்கமாச்சு ஸ்த்ரீகளின் சிநேகமும் கூடவே வந்தது ஊரிலும் கெட்ட பேர் உறவும் தள்ளி வைக்க என்னென்னவோ ஆச்சு ஆனாலும் உன் கருணை மழை மட்டும் குறைவற்றுப் பெய்ய என்ன தவம் செய்தேனெனக் கேட்டதுக்குச் சொன்னாள் தயை கருணை க்ஷமா மூன்றுமென் முலைகளில் சுரக்க நீதான் … Read more

168. தீபாவளி

அவந்திகாவுக்கு வீட்டை விட்டு வெளியே செல்வது பிடிக்காது.  அது நான் செய்த அதிர்ஷ்டம்.  பல பெண்களுக்கு வெளியே செல்வதுதான் பிடிக்கும்.  ’நான் என்ன அடிமையா. வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்க? வெளியே தெரு போக வேண்டாமா?’ என்பது அவர்கள் வாதம்.  வாரம் ஒருமுறையாவது ஓட்டலில் சாப்பிட வேண்டும்.  வாரம் ஒருமுறையாவது சினிமாவுக்குப் போக வேண்டும்.  கடற்கரைக்குப் போக வேண்டும்.  கோவிலுக்குப் போக வேண்டும்.  உறவினர் வீட்டுக்குப் போக வேண்டும்.  புடவை எடுக்கப் போக வேண்டும்.  இப்படி பலது உண்டு.  … Read more

Pithy thoughts – 7

பரிவாரங்களுடன் வேட்டைக்குச் சென்றான் அரசன் வற்றிக் கிடந்தது வனம் மழை இல்லை பசுமை இல்லை பாறைகளில் சுனைகளின் சுவடுகள் மட்டுமே பழைய தடம் கொண்டிருந்தன ஒரு முயல்கூடத் தென்படவில்லை யார் கொடுத்த சாபமோ வனமும் இந்த கதியாயிற்றேவென துக்கித்து நின்றபோது அவனெதிரே வந்த கண்கள் பஞ்சடைந்த   புலியொன்று பட்டினியில் செத்துக் கொண்டிருக்கும் என்னைக் கொன்று விடு என்று வாய்விட்டுச் சொன்னது தன் ஆடைகளைக் கழற்றியெறிந்த மன்னன் அந்தப் பசித்த புலியிடன் தன்னைப் புசிக்கக் கொடுத்தான் திரண்டு … Read more

Pithy thoughts – 6

கனவுகளாலும் காலடிகளாலும் எண்ணிக்கையற்ற கதைகளாலும் நிரம்பியிருந்த அந்த மணல்வெளியில் அமர்ந்திருந்த அவனிடம் ஒரு மணல் சொன்னது உன் கதையும் என் கதையும் ஒன்றுதானென அநந்தகோடி ஆண்டுகளுக்கு முன்னே ஒரு ஆதித்தாயின் கருவை உடைத்தபடி வந்த அநந்தகோடி அணுத்தூசுகளின் காலப்பெருவெளியில் மிதந்து வந்து இப்போது உன் கையில் அமர்ந்திருக்கிறேன். இப்போது அண்ட சராசரங்களும் என் வயிற்றில் எனச் சொல்லியபடி அந்த மணல் துகளை விழுங்கி வைத்த அவன் அந்த க்ஷணமே வயிறு வீங்கிச் செத்தான் யாருமற்ற கடற்கரையில் கேட்பாரற்றுக் … Read more