நவம்பர் 8, ஞாயிறு இரவு 9 மணி ஸூம் சந்திப்பு

வரும் ஞாயிறு இந்திய நேரம் இரவு 9 மணிக்கு ஸூமில் வாசகர்களை சந்திக்கிறேன். இந்தச் சந்திப்பை சார்லட் தமிழ்ச் சங்கம் ஒருங்கிணைத்திருக்கிறது. அமெரிக்க நேரம் காலை பத்தரை மணி. யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். tiny.cc/charlottesangam என்பதை க்ளிக் செய்தால் இணைந்து கொள்ளலாம். நிறைய பேர் வருவார்கள் என்பதால் முன்னூறு பேர் கலந்து கொள்ளும் அளவில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. எனவே வாசகர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். ஒரு மணி நேரம் பேசுவேன். அதற்கு மேல் … Read more

166. ஜெயமோகனுக்கு ஒரு கடிதம்… (புதுமைப்பித்தன் தொகுப்பு தொடர்பாக)

அன்புள்ள ஜெயமோகனுக்கு… இதை நான் உங்களுக்கு ஒரு அந்தரங்கக் கடிதமாகவே எழுத விரும்பினேன்.  ஆனால் இதோ அடுத்த மாதம் எனக்கு அறுபத்தேழு வயது ஆகப் போகிறது.  இது நாள் வரை என் வயது பற்றி ஒருக்கணம் கூட நினைத்துப் பார்த்தது இல்லை.  வயது பற்றிப் பேசுபவர்களிடம் கூட சீ, அந்தாண்ட போ என்றுதான் விழுந்திருக்கிறேன்.  எப்போதுமே இருபத்தைந்தின் மனநிலைதான்.  ஆனால் முதல் முறையாக வயது பற்றி நினைத்தே ஆக வேண்டிய கட்டாயம் நேர்ந்திருக்கிறது.  இரண்டு இரண்டு பேராக … Read more

165. புதுமைப்பித்தனின் துரோகம்

புதுமைப்பித்தன் இப்படிச் செய்வார் என்று நான் நினைக்கவே இல்லை.  அவர்தான் காசில் கொற்றத்து என்பதற்கு அர்த்தம் சொல்லி – அதாவது அது பகடி என்று – அடிக்குறிப்பு கொடுத்துத் தொலைத்திருக்கிறார் என்று சத்தியமாக எனக்குத் தெரியாமல் போய் விட்டது.  இதை நான் கொஞ்சமும் யூகிக்கவில்லை.  யூகிப்பதும் சாத்தியம் இல்லை.  ஒரு படைப்பாளியே கதைக்கும் கதையில் அவன் ஆடியிருக்கும் பகடி சிலம்பத்துக்கும் அவனே விளக்கம் சொல்லுவான் என்று யார்தான் யூகிக்க முடியும்?  எனவே புதுமைப்பித்தனை நம்பி வெங்கடாசலபதியைக் குறை … Read more

164. கண்காணாத தீவிலிருந்து ஒரு தேவதையின் குரல்…

சில தினங்களுக்கு முன்பு வளனரசுவோடு பேசிக் கொண்டிருந்த போது அவனுடைய ஊரில் கேப் வெர்தே என்ற ஆஃப்ரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்றும் அவர்களைச் சேர்ந்த ஒருவர், தங்கள் நாட்டின் செஸாரியா எவோரா என்ற பாடகரைப் பற்றிக் குறிப்பிட்டதாகவும் சொன்னான்.  செஸாரியா எவோரா பற்றி இதற்கு முன்னால் கேள்விப்பட்டிருக்கிறாயோ என்று கேட்டேன்.  இல்லை, இதுதான் முதல் முறை என்றான்.  உடனடியாக எனக்கு ஒரு மின் அதிர்வு ஏற்பட்டது.  பின்வரும் சூழ்நிலையைக் கற்பனை செய்து பாருங்கள்.  எங்கோ ஒரு … Read more

163. சாரு கனிந்து விட்டார்? – வளன் அரசு

இப்போதுதான் கிண்டிலில் வாசிக்கப் பழகினேன். உண்மையில் அட்டகாசமாக இருக்கிறது. சாருவின் நாடோடியின் நாட்குறிப்புகள் மற்றும் நிலவு தேயாத தேசம் ஆகிய இரு நூல்களையும் வாசித்து முடித்தேன் (நாட்குறிப்புகள் அரை நாள், அடுத்த ஒரு நாள் நிலவு தேயாத தேசம்). இவ்விரண்டு நூல்களையும் படித்த பிறகு சாருவின் எழுத்துக்கள் குறித்து எழுத வேண்டும் என்ற எண்ணம் மனதில் திரண்டு கொண்டேயிருந்தது. இதற்கிடையில் லக்ஷ்மி சரவணகுமாரின் ‘ரூஹ்’ என்ற அடுத்த அற்புதத்தில் சிக்கிக்கொண்டேன். நிலவு தேயாத தேசத்தை ஒரே நாளில் … Read more