சிங்கப்பூர் குஞ்சு…(அபாயகரமான திருப்பங்களை நோக்கி…)

அன்புள்ள சாரு,நானும் சிங்கப்பூரில் வசிப்பவன் தான். என் பெயர் வேண்டாம். சிங்கப்பூர் குஞ்சு பற்றி உங்களுக்கு எப்படி இப்படி உடனே புரிந்தது என்று வியப்பாயிருக்கிறது.உங்களை நான் ஒரு எழுத்தாளன் என்பதைத் தாண்டி ஒரு ஞானியாகவே எப்போதும் பார்ப்பேன். ஒரு ஞானிக்கே, எதிரிலிருப்பவனின் அத்தனை பாசாங்குகளுக்குப்பின் உள்ள அந்த அகம்பாவம், குரூரம், எகத்தாளம் எல்லாம் தெரியும். புரியும்.இந்த நச்சுப்பாம்பு பற்றி யாரும் இவ்வளவு எழுதியது கிடையாது. உங்களுக்கு முதலில் நன்றி.தன்னிடம் அல்லது தன் அமைப்பிடம் எழுத வந்து, பிறகு … Read more

சிங்கப்பூர் குஞ்சு (தொடர்கிறது…)

கைலாச சாமியார் பற்றி தொடர் எழுதி, அவர் என் மீது பல வழக்குகள் போட்டு ஒவ்வொரு வழக்குக்காகவும் பெங்களூருக்கு மாதாமாதம் எட்டு ஆண்டுகள் போய் வந்தேன்.  நாய் அலை பேய் அலை என்பார்களே அதுதான்.  எழுதவும் முடியவில்லை.  எழுதினால் அதற்கு ஒரு வழக்கு பாயும்.  ஒருமுறை பெங்களூர் போலீஸ் என் வீட்டுக்கு அரெஸ்ட் வாரண்டோடு வந்து விட்டார்கள்.  ஒரு வார்த்தை தமிழோ ஒரு வார்த்தை ஆங்கிலமோ தெரியாமல் என் வீட்டையே கண்டு பிடித்து விட்டார்கள் அந்த இரண்டு … Read more

எம். ரிஷான் ஷெரீபின் நூல்கள்

சர்வதேச புத்தகக் கண்காட்சியில்  இலங்கை எழுத்தாளரின் நூல்கள்     2021 ஆம் ஆண்டிற்கான 44 ஆவது சர்வதேச புத்தகக் கண்காட்சியானது, இந்தியா, சென்னை YMCA நந்தனம் வளாகத்தில் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 09 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கிறது. உலகம் முழுவதிலுமிருந்தும் பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்வில் இலங்கை எழுத்தாளரான எம்.ரிஷான் ஷெரீபின் மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்புகள் மூன்று, நாவல்கள் இரண்டு என புதிய ஐந்து நூல்கள் … Read more

பெரிய விஷயமும் சின்ன விஷயமும்

முகமூடிகளின் பள்ளத்தாக்கு நாவலுக்கு இதுவரை 250 பேர் முன்பதிவு செய்திருக்கிறார்கள்.  நல்ல விஷயம்.  எல்லோருக்கும் நன்றி.  ஆனாலும் பழுப்பு நிறப் பக்கங்கள் நூலுக்கு 600க்கு மேல் முன்பதிவு செய்தார்கள்.  அதோடு ஒப்பிட்டால் இது கம்மிதான்.  மேலும், அது கட்டுரைத் தொகுதி.  இது நாவல்.  இருந்தாலும் 250 பேர் மாதக் கடைசியில் முன்பதிவு செய்தது பெரிய விஷயம்தான்.  சின்ன விஷயம் எது என்றால், லத்தீன் அமெரிக்க சினிமா நூலுக்கு 15 பேர் முன்பதிவு செய்திருப்பது.  அந்த நூல் பற்றி … Read more

சிங்கப்பூர் குஞ்சு

இந்தக் கட்டுரையைப் படித்து விட்டு மேற்கொண்டு படிக்கவும். டியர் சிவானந்தம், இந்த குஞ்சு என்ற வார்த்தையை தாய்மார்கள் தங்கள் ஆண் மகவுகளின் ஜனன உறுப்பைக் குறிப்பதற்காகக் குறிப்பிடுகிறார்கள்.  வளர்ந்த ஆடவர்களுக்கு அது பொருந்தாது.  அதற்கு வேறு பெயர்.  மேலும், இலக்கிய வட்டாரங்களில் தங்களுக்குப் பிடிக்காதவர்களைக் கிண்டல் செய்ய விசிலடிச்சான் குஞ்சு என்று சொல்வார்கள்.  அதிகம் அப்படிச் சொன்னவர் திருவாளர் வெங்கட் சாமிநாதன்.  நான் இந்த இரண்டு அர்த்தங்களில் மேலே குறிப்பிடவில்லை.  எங்கள் தஞ்சை மாவட்டத்தில் வளராத விடலைப் … Read more

புத்தக விழா

புத்தக விழா வந்து விட்டது.  எழுத்தாளர்கள்தான் அது பற்றி மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். பொதுஜனத்திடம் அந்த ஆர்வம் இருக்கிறதா என்று விழாவின் போதுதான் தெரியும்.  சென்ற ஆண்டே விற்பனை ரொம்ப ’டல்’ என்றும் அதற்கு முந்தின ஆண்டை விடப் பாதிதான் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.  இந்த ஆண்டு கொரோனாவின் பாதிப்பு வேறு.  ஆனால் எது எப்படி இருந்தாலும் எழுத்தாளர்கள் மட்டும் எந்தக் கவலையுமின்றி படு உற்சாகமாக புத்தக விழாவை எதிர்கொள்ளத் தயாராகி விட்டார்கள்.  நான் எந்தக் காலத்திலும் … Read more