அவதூறுக்கு எதிர்வினை (8): அய்யனார் விஸ்வநாத்

ஓர் எழுத்தாளன் தன் படைப்புகளுக்காக விமர்சிக்கப்படுவது என்பது வேறு – ஒருவகையில் அது ஆரோக்கியமானதும் கூட. ஆனால் எழுத்தாளனின் இருப்பே சிலருக்கு ஒவ்வாததாக இருப்பதும், அவன் வாழ்நாள் முழுக்க ‘இலக்கியவாதி இல்லை’ என்கிற புறந்தள்ளல்களை எதிர்கொள்ள நேரிடுவதும் நாம் இயங்கும் இந்த சூழலுக்கு எதிரானதும் அவமானகரமானதுமாகும். சாருவின் மீது தொடர்ச்சியாக நிகழ்த்தப்படும் இந்த வன்முறைக்கு என் எதிர்ப்பைப் பதிவு செய்கிறேன். சக மனிதனை இழிவு செய்வதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. நாற்பது ஆண்டுகளாக தமிழின் … Read more

அவதூறுக்கு எதிர்வினை (7): அமல்ராஜ் பிரான்சிஸ்

சாருவின் எழுத்துக்கள் இலக்கியமா என்று அவரை வாசித்து விமர்சிப்பவர்கள் மட்டில் எனக்கு பெரும் மதிப்பு உண்டு. வாசகர்களை எதுவுமே செய்யாத எழுத்து இலக்கியமா என்ன? செய்யட்டும். செய்வதால் விமர்சனம் வருகிறது. நல்லது. ஆனால், காலாகாலமாக கொழுந்துவிட்டெரியும் சாருவிற்கு எதிரான வக்கிர விமர்சனங்களில் குறைந்த விகிதாசாரமே நான் மேலே சொன்ன வகையறாவினுள் சேரும். மீதம், அவர் மீதான தனிப்பட்ட வன்முறை. ஒரு தனிமனிதன் மீதான பழி, வசை. கோகுல் பிரசாத்தின் பதிவும் அப்படித்தான். விமர்சனம் அல்ல, வன்முறை. ஒரு … Read more

அவதூறுக்கு எதிர்வினை (6): பெருந்தேவி

சாரு தமிழின் முதன்மையான பின்நவீனத்துவப் படைப்பாளி. சாருவோ வேறெந்த தமிழ் எழுத்தாளரோ வாசகர்களின் பொருளாதார ஆதரவைக் கோரினாலோ அதில் வாழ்ந்தாலோ அதை எள்ளிப் பேசவோ விமர்சிக்கவோ தமிழ்ப் பொதுச் சமூகத்துக்கு, குறிப்பாக இன்று வரை எந்தத் திரைப்படத்தையும் கலை நுண்ணுர்வுடனும் தனித்துவத்தோடும் எடுக்காத திரையுலகினருக்கு, அதுவும் திரை இயக்குநப் போலிகளுக்கு எந்த அருகதையும் இல்லை. ஒருவேளை அந்த இயக்குநர் குறிப்பிட்ட கதாபாத்திர வார்ப்பை எந்த எழுத்தாளரையும் மனதில் வைத்து எடுக்காமல், அவரது உதவியாளர் அவ்விதமாக உளறியிருந்தால், அதை … Read more

அவதூறுக்கு எதிர்வினை (5): அராத்து

அனானிமஸ் (2): நான் சின்ன வயதாக இருந்த போது ஒரு அண்ணன் இரவில் தெருக்கடை போடுவார். அப்போது சாலையிலேயே நாற்காலி , மேஜை போடும் பழக்கம் இருந்தது. அவர் மிஸ்டர் மெட்றாஸ் போட்டிகளில் கலந்து கொண்டவர். வென்றாரா என்பது நினைவில்லை. அப்போது அவர் கமல் ரசிகர். அப்போது கமல் ரசிகர்களில் பலர் ஜிம் பாடி மெயிண்டெயின் செய்வார்கள். ரஜினி ரசிகர்களுக்கும் இவர்களுக்கும் அவ்வபோது முட்டிக்கொள்ளும். ரஜினி ரசிகர்கள் எந்த ஆயுதத்தை கமலுக்கு எதிராக இறக்குவது எனத் தெரியாமல் … Read more

அவதூறுக்கு எதிர்வினை (4): அராத்து

அனானிமஸ் (1): முதலில் ஒரு சிறுகதை – ஆர்கானிக் குழந்தைகள் ஒரு தெருவில் சில வீடுகள் இருக்கும் அல்லவா? அந்த வீடுகளில் சிலருக்கு ஒரு குழந்தை இருந்தது. பலருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன. வெகு சிலருக்கு ஏழெட்டு குழந்தைகள். ஒவ்வொரு வீட்டுக்குழந்தைகளும் வெவ்வேறு மாதிரிதானே இருக்கும்? அப்படியே இருந்தன என்றுதான், இந்த வாக்கியம் முடியும் என்று எதிர்பார்த்து இருப்பீர்கள்? அதுதான் இல்லை. கிட்டத்தட்ட எல்லார் வீட்டுக் குழந்தைகளும் ஒன்றே போல் காட்சியளித்தன. சின்னச் சின்ன மாறுதல்கள்தான். ஆனால் … Read more

அவதூறுக்கு எதிர்வினை (3): செல்வகுமார் கணேசன்

முதல் அறம்: கவிதை: செல்வகுமார் கணேசன் செத்தது தன் அப்பன் இல்லை என்றதும் இளிப்புடன் நகர்வது இயல்பென்று ஆகிவிட்டது அமைதியாக இருப்பது மிக நல்ல குணம் என்று சொல்கின்றன கல்லறை சவங்கள்… பிடிக்காத ஒருவன் தாக்கப்பட்டதும் குருதி ருசிக்க ஆர்வப்படுகின்றன மிருகங்கள் ஏளனம் சொற்களின் வழியே கசிவது அவரவர் உயிர்தான் என அறியாமல் தமிழினி மெல்லச் சாகும் எனப் பாடப்பட்டது முதல் அறம்