பாபாகாவின் புதிய நாவல்

பாபாகா.  பாபா என்பதை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியும்.  கா என்பதை காகிதம் என்பதில் வரும் கா மாதிரி உச்சரிக்காமல் கானம் என்பதை உச்சரிப்பது போல் சொல்ல வேண்டும்.   கவர்மெண்ட் என்பதில் வரும் ஜி.  இவருடைய முதல் நாவல் உபுகு. உபுகு என்பது ஜியாமெட்ரிக் சகுனங்கள்.  உடனடியாக எனக்கு தாமஸ் பிஞ்ச்சோன் ஞாபகம் வருகிறார்.  இப்படி எதைப் படித்தாலும் ஒரு மேற்கத்திய எழுத்தாளர் ஞாபகம் வருவதற்கு நான் ஒன்றும் பண்ண முடியாது.  அதற்காக ஒரு … Read more

மஞ்சள் விநாயகர்

மனிதனின் கற்பனை உச்சங்களில் ஒன்று, விநாயகர். எப்போதும் போல் நேற்று இரவும் பத்து மணிக்கு நான் உறங்கப் போய் விட்டேன். நள்ளிரவு ஒரு மணிக்கும் அவந்திகாவின் அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. காலையில் எழுந்து பார்த்தால் ஹாலில் இந்த மஞ்சள் விநாயகர். எங்கள் வீட்டில் இரண்டு பால்கனிகள் உள்ளன. ஒன்றில் பூச்செடிகள். இன்னொன்றில் மூலிகை. என்னவோ தெரியவில்லை, காய்கறிகளே வருவதில்லை. பூந்தோட்டத்தில் பறித்தது அந்த இரண்டு பூக்களும். கண்கள் என்ன என்றேன். மிளகு என்றாள்.