புதுமைப்பித்தன் : பேருரை: சாரு நிவேதிதா

கடந்த ஆண்டு நவம்பர் இறுதியிலும் டிசம்பர் ஆறாம் தேதியும் இரண்டு அமர்வுகளில் புதுமைப்பித்தன் பற்றி காலை ஆறு மணிக்கு உரையாற்றினேன். இந்த உரைகளைக் கேட்டால் இலக்கியம் பற்றிய உங்கள் புரிதல் மேம்படும் என்று நம்புகிறேன். என் இலக்கியப் பயணத்தில் புதுமைப்பித்தன் பற்றிய இந்த இரண்டு உரைகளும் மிக மிக முக்கியமானவையாகக் கருதுகிறேன். முதல் உரையும் அதைத் தொடர்ந்த கேள்வி நேரமும் மூன்றரை மணி நேரம் நீண்டது. கேள்வி நேரத்தை விட்டு விடாதீர்கள். அதில்தான் சில சமயங்களில் உரையை … Read more

ஹெல்லோ…

சிலருக்கு இளைய ராஜாவைப் பார்த்தாலே உணர்ச்சி மிகுதியில் அழுகை வந்து விடும். சிலர் அவரைப் பற்றிப் பேசும்போதே அழுது விடுவார்கள். சிலர் அவரைப் பார்த்ததுமே காலில் விழுந்து விடுவார்கள். அவர்களின் ரத்த ஓட்டமாக இருப்பவர் இளைய ராஜா. எம்.எஸ். விஸ்வநாதனைப் பலருக்கும் பிடிக்கும். ஆனால் ராஜா அளவுக்கு யாரும் உணர்ச்சிவசப்பட்டு நான் பார்த்ததில்லை. நான் தமிழில் சிந்தித்து, தமிழில் பேசி, தமிழில் எழுதினாலும் அந்நியன். எனக்கு இந்த ராஜா மேட்டர் எல்லாம் புரிவதே இல்லை. அது எப்படி … Read more

சில கேள்விகளும் பதில்களும்…

சாரு, வணிக எழுத்தும் இலக்கியமும் படித்து மிகவும் வருத்தப்பட்டேன்.  ஏனென்றால், இதே பிரச்சினை பற்றி நீங்கள் குறைந்தது நூறு முறையாவது எழுதியிருப்பீர்கள்.  இன்னும் கூட இதை எழுதித்தான் புரிய வைக்க வேண்டியிருக்கிறது என்பது உண்மையிலேயே துரதிர்ஷ்டம்தான்.   இந்தச் சிறிய கட்டுரையைப் படிப்பவர்களுக்கு சில சந்தேகங்கள் எழலாம்.  அதையெல்லாம் கேள்விகளாகத் தொகுத்திருக்கிறேன்.  இந்தக் கேள்விகளுக்கான பதில்களை நீங்கள் எங்களுக்கு நேரிலேயே பலமுறை விளக்கியிருக்கிறீர்கள்.  இருந்தாலும் பலருக்கு இந்தச் சந்தேகங்கள் எழலாம் என்பதால் கேட்கிறேன். 1.நன்றி என்ற குணம் என்னிடம் … Read more

வணிக எழுத்தும் இலக்கியமும்

பிஞ்ஜ் செயலி இருந்திராவிட்டால் நான் ராஜேஷ்குமாரைப் படித்திருக்க மாட்டேன்.  கைபேசியில் ஒரு குறியீட்டை அழுத்தினால் ராஜேஷ்குமாரைப் படித்து விட முடிகிறது என்ற அருகாமைதான் காரணம்.  இல்லாவிட்டால் கிண்டிலில் கூடத் தேடிப் போய் படித்திருக்க மாட்டேன்தான்.  இலக்கியத் துறையில் இன்னமும் ஜீவித்திருக்கக் கூடிய ஒருசில தீவிரவாதிகளில் நானும் ஒருவன் என்பதால் கைபேசியில் கிடைத்தாலும் படிக்கக் கூடிய ஆள் இல்லை நான்.  ஆனாலும் படித்ததற்குக் காரணம், வணிக எழுத்தில் அந்தப் பெயர் ஒரு சூப்பர் ஸ்டார் ரேஞ்ஜில் புழங்கி வருவதுதான்.  … Read more

வன யோனா பற்றி அபிலாஷ்

அராத்து ஒரு நல்ல பாலியல் உளவியல் கதை எழுதியிருக்கிறார் – “வன யோனா”. தி.ஜா, ராஜேந்திர சோழன் பாணி கதையை தன்னுடைய கலவையான மொழியில் சொல்லி இருக்கிறார். கதையின் முடிவு, resolution, திருப்பம் பொருத்தமாக அமையவில்லை. ஆனாலும் முக்கியமான கதை தான். இந்த விழுமியங்கள் நம்முடைய மொழியை இருட்டாக மொழுமொழுவென மாற்றி விடுகின்றன. இத்தகைய கதைகள் ஒரு வெளிச்சத்தை சட்டென கொண்டு வந்து தரையில் துலக்கி விட்டது போல பண்ணுகின்றன.இதை அப்படியே திருப்பி பெண்களின் தரப்பில் இருந்து … Read more

வன யோனா: சிறுகதை: அராத்து

“பொண்ணு பாக்கறப்ப தனியா பேச விடுவாங்க இல்ல, அப்பவே புடிச்சி கிஸ் பண்ணிடு மச்சி ” என்றான் சயன் . நாளைக் காலை மதுரைக்குச் சென்று பெண் பார்க்க இருக்கும் அவலாஞ்சி , இன்று நண்பன் சயனுடன் பியர் அடித்துக்கொண்டு இருக்கிறான். அவலாஞ்சியின்  அப்பா மின் துறையில் அவலாஞ்சியில் வேலை பார்த்தபோது இவன் பிறந்ததால் அவலாஞ்சி என்றே பெயர் வைத்து விட்டார். பையன் ஊட்டியில் தான் படித்தான். ஊட்டி கான்வெண்ட் என “ரேஞ்சை” ஏற்றிக்கொள்ளாதீர்கள். ஊட்டியில் அரசுப்பள்ளியில் … Read more