அவனா நீ?

குமரேசன் ஃபோன் செய்தார்.  “பதற்றம் கொள்ளாதீர்கள்.  இந்த வினீத் பிரச்சினையால் உங்கள் வேலை எதுவும் கெட்டு விடக் கூடாது” என்றார்.  ஔரங்கசீப் படிப்பவர்களுக்குத் தெரியும்.  மாத ஆரம்பத்திலேயே பதினைந்து அத்தியாயங்களை அனுப்பி விடுவேன்.  பிறகு அந்த மாதம் பூராவும் படித்துக் கொண்டிருப்பேன்.  ஆனால் இன்று தேதி ஐந்து ஆகி விட்டது.  ஒரே ஒரு அத்தியாயம்தான் அத்தியாயப் பட்டியலில் இருப்பதை நீங்கள் காண முடியும்.  அவ்வளவுதான் அங்கே உள்ளது.  பதினைந்தில் இன்னும் ஒன்று கூட அனுப்பவில்லை.  நாளைக்குள் இரண்டாவது அனுப்ப வேண்டும்.  விழா முடிந்ததும் ஆரம்பிக்கலாம் என்று நினைத்தேன்.  வினீத் பிரச்சினை குறுக்கிட்டு விட்டது.  அதை … Read more

ஓராண்டுப் பயிற்சி

ஸீரோ டிகிரி பதிப்பகம் மற்றும் தமிழரசி அறக்கட்டளை இணைந்து நடத்திய பரிசளிப்பு விழா நேற்று இனிதே நடந்தது.  இப்படித்தான் மற்றவர்கள் எழுதுவார்கள்.  நான் அப்படிப்பட்ட ஆள் இல்லையே?  அதனால் அந்த இனிய விழாவில் என் நண்பன் செய்த குளறுபடியால் நேர்ந்த பிரச்சினைகளையும் எழுதித்தான் ஆக வேண்டும்.   கிட்டத்தட்ட பத்து லட்சம் ரூபாய் செலவாகியிருக்கும் என்று நினைக்கிறேன்.  அத்தனை பிரம்மாண்டமான விழா.  அதை சாத்தியப்படுத்திய அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.  முக்கியமாக தமிழரசி அறக்கட்டளையின் நிர்வாகிகளும் ஸீரோ டிகிரி பதிப்பக நண்பர்களும்.  அவர்களுக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துகளும். மிகச் சிறப்பான இலக்கிய … Read more

எழுதிக் கொண்டே இருக்கலாம்…

ஔரங்கசீப் நாவலுக்காக நூறு புத்தகங்கள் வாங்கியிருப்பேன்.  ஒவ்வொன்றுமே ஆயிரம் ரெண்டாயிரம் இருக்கும்.  இதில் ஒருசில தான் நானே காசு போட்டு வாங்கியது.  மற்றவை வாசகர்கள்/நண்பர்கள் வாங்கிக் கொடுத்தது.  இன்னொரு அம்பதோ நூறோ நூலகங்களில் திரட்டியது.  ஒரு நாவலுக்காக இந்த அளவு படித்தது இதுதான் முதல்.  புத்தகங்கள் மட்டுமே ஒரு லட்சம் ரூபாய் ஆகியிருக்கும். நேற்றோடு ஒரு ஐநூறு பக்க நூலைப் படித்து முடித்தேன்.  ஒரே ஒரு தகவலைத்தான் எடுத்துக் கொண்டேன்.  ஆனால் அது ஒரு அதி முக்கியமான … Read more

அமலா பாலை அழைத்திருக்கிறீர்களா, ராம்ஜி?

வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களின் ஆயுளோடு ஒப்பிட்டால் மனித ஆயுள் எத்தகையது?  ஒப்பிட முடியுமா?  ஒரு புல் நுனியில் திகழும் நீர்த் துளியோடு சமுத்திரத்தை ஒப்பிட முடியுமா?  நீர்க்குமிழி.  ஈசல்.  இவ்வாறாக, மனித ஆயுளின் அற்பத்தன்மைக்கு எத்தனையோ எண்ணிலடங்கா உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.  ஆனாலும் ஒரு ஹெடோனிஸ்டுக்கு கண்ணிமைக்கும் ஒரு கணம்தான் ஆதி அந்தம் இல்லாதது.  Eternal.  இந்தப் பின்னணியில் பின்வரும் விஷயத்தைப் படிக்கவும். ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.  என் காலத்திய இலக்கிய நிகழ்ச்சி மவுண்ட் ரோடு எல்.எல்.ஏ. … Read more

நூற்றாண்டில் ஒருவர்

நூற்றாண்டில் ஒருவர்தான் இப்படித் தோன்ற முடியும். இவரைக் கேட்கும் தோறும் இவரை எனக்கு அறிமுகப்படுத்திய பா. ராகவனை நன்றியுடன் நினைவு கூர்கிறேன். divine என்ற வார்த்தைக்கு ஸ்தூல சாட்சி வெங்கடேஷ் குமார். Raag Bhairav by Padmashri Pandit Venkatesh Kumar – YouTube

இலக்கியத்தை விலை பேசுதல்: ஜெயமோகன்

இந்தக் கட்டுரையில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் நான் எழுதியதாகவும் கொள்ளவும். இலக்கியத்தை விலைபேசுதல்… | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)