நூற்றாண்டில் ஒருவர்

நூற்றாண்டில் ஒருவர்தான் இப்படித் தோன்ற முடியும். இவரைக் கேட்கும் தோறும் இவரை எனக்கு அறிமுகப்படுத்திய பா. ராகவனை நன்றியுடன் நினைவு கூர்கிறேன். divine என்ற வார்த்தைக்கு ஸ்தூல சாட்சி வெங்கடேஷ் குமார். Raag Bhairav by Padmashri Pandit Venkatesh Kumar – YouTube

இலக்கியத்தை விலை பேசுதல்: ஜெயமோகன்

இந்தக் கட்டுரையில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் நான் எழுதியதாகவும் கொள்ளவும். இலக்கியத்தை விலைபேசுதல்… | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)

என் ஆசானுக்கு மரியாதை

ஸீரோ டிகிரி பப்ளிஷிங் மற்றும் தமிழரசி அறக்கட்டளை சார்பாக என் ஆசானும் மதிப்புக்குரிய நண்பருமான அ. மார்க்ஸுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அளிக்கப்படுகிறது. இதை நான் எனக்கே அளிக்கப்பட்ட கௌரவமாகக் கருதுகிறேன். எங்கள் சில்ஸிலாவில் யாருமே அப்படி அப்படியே க்ளோனிங் செய்த மாதிரி ஒருவர் சொல்வதை அடுத்தவர் ஏற்றுக் கொள்வது என்பது கிடையாது. அரசியல், தத்துவம், சமூகம், இலக்கியம் போன்ற பல்வேறு துறைகளில் அன்பையும் அபிமானத்தையும் அடிப்படையாகக் கொண்ட புரிதலோடு வாழ்தல் என்பதுதான் இந்த சில்ஸிலாவின் பொதுத்தன்மை. … Read more

சுஷியும் வஸாபியும்…

நேற்று எக்ஸ்பிரஸ் அவென்யூ போகவில்லை.  காதர் நவாஸ் கான் ரோடு போய் விட்டேன்.  என் நண்பர் மகேஷ் முகநூல் பார்க்க மாட்டார்.  ஆனால் நேற்று ஏதோ எதேச்சையாகப் பார்த்திருக்கிறார்.  ஊரில் பெரும்பாலும் இல்லாதவர் நேற்று ஊரில் இருந்திருக்கிறார்.  எப்போதும் வேலை மும்முரத்தில் இருப்பவர் நேற்று கொஞ்சம் ஆசுவாசமாக இருந்திருக்கிறார்.  நான் வரட்டுமா என்றார்.  கரும்பு தின்னக் கூலியா என்றேன்.  காதர் நவாஸ் கானில் தொஸ்கானோ என்ற இத்தாலிய உணவகம் உள்ளது. அங்கே போனோம்.  மகேஷ் கேரளத்தைச் சேர்ந்தவர் … Read more