நஷ்டம் எனக்குத்தான்…

வினித் போன்றவர்களைப் பற்றி விமர்சித்து எழுதுவதால் வினித்துக்கு மனக்கஷ்டம் என்பது போக, இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது நான்தான்.  உதாரணமாக, பொள்ளாச்சி மகாலிங்கம் மாதிரி ஒரு கோடீஸ்வரருக்கு என் எழுத்து பிடிக்கிறது, சந்திக்க நினைக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  உடனே வினித் பற்றிய கட்டுரைதான் அவருக்கு முன்னே காண்பிக்கப் படும்.  அதைப் படித்த பிறகு மனிதர் என் பக்கம் திரும்பிப் பார்ப்பாரா?  அதனால்தான் சொல்கிறேன், என் நண்பர்கள்தான் எனக்குப் பெரிதும் பிரச்சினையாக இருக்கிறார்கள் என்று.  எழுதாமல் இரேன் என்றால் … Read more

வாழ்விலே ஒரு முறை…

பொதுவாக என் எழுத்தைக் கூர்ந்து கவனிப்பவர்களுக்குப் புரியும்.  நான் மனிதர்களை விரும்பவில்லை.  குறிப்பாக இந்தியர்களின் பழக்க வழக்கங்கள் எனக்கு மிகுந்த எரிச்சலைத் தருகின்றன.  இந்தியர்கள் ஒன்றும் நரகத்திலிருந்து வரவில்லைதான்.  ஆனால் இவர்கள் இவர்களின் பெற்றோரினால் இப்படியாகத்தான் வளர்க்கப்பட்டிருக்கிறார்கள்.  எங்கள் வீட்டுக்கு மேல் வீட்டில் குடியிருப்பவர்கள் பெரும் கோடீஸ்வரர்கள்.  ஆனால் மேல் வீட்டிலிருந்து எங்கள் பால்கனியில் சகலமும் வந்து விழுகிறது.  வாழைப்பழத் தோல், சாக்லெட் காகிதங்கள், கோழி மற்றும் ஆட்டு எலும்புத் துண்டு, தரை பெருக்கும் துடைப்பானிலிருந்து விழும் … Read more