அவனா நீ?

குமரேசன் ஃபோன் செய்தார்.  “பதற்றம் கொள்ளாதீர்கள்.  இந்த வினீத் பிரச்சினையால் உங்கள் வேலை எதுவும் கெட்டு விடக் கூடாது” என்றார்.  ஔரங்கசீப் படிப்பவர்களுக்குத் தெரியும்.  மாத ஆரம்பத்திலேயே பதினைந்து அத்தியாயங்களை அனுப்பி விடுவேன்.  பிறகு அந்த மாதம் பூராவும் படித்துக் கொண்டிருப்பேன்.  ஆனால் இன்று தேதி ஐந்து ஆகி விட்டது.  ஒரே ஒரு அத்தியாயம்தான் அத்தியாயப் பட்டியலில் இருப்பதை நீங்கள் காண முடியும்.  அவ்வளவுதான் அங்கே உள்ளது.  பதினைந்தில் இன்னும் ஒன்று கூட அனுப்பவில்லை.  நாளைக்குள் இரண்டாவது அனுப்ப வேண்டும்.  விழா முடிந்ததும் ஆரம்பிக்கலாம் என்று நினைத்தேன்.  வினீத் பிரச்சினை குறுக்கிட்டு விட்டது.  அதை … Read more

ஓராண்டுப் பயிற்சி

ஸீரோ டிகிரி பதிப்பகம் மற்றும் தமிழரசி அறக்கட்டளை இணைந்து நடத்திய பரிசளிப்பு விழா நேற்று இனிதே நடந்தது.  இப்படித்தான் மற்றவர்கள் எழுதுவார்கள்.  நான் அப்படிப்பட்ட ஆள் இல்லையே?  அதனால் அந்த இனிய விழாவில் என் நண்பன் செய்த குளறுபடியால் நேர்ந்த பிரச்சினைகளையும் எழுதித்தான் ஆக வேண்டும்.   கிட்டத்தட்ட பத்து லட்சம் ரூபாய் செலவாகியிருக்கும் என்று நினைக்கிறேன்.  அத்தனை பிரம்மாண்டமான விழா.  அதை சாத்தியப்படுத்திய அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.  முக்கியமாக தமிழரசி அறக்கட்டளையின் நிர்வாகிகளும் ஸீரோ டிகிரி பதிப்பக நண்பர்களும்.  அவர்களுக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துகளும். மிகச் சிறப்பான இலக்கிய … Read more