அங்க சேஷ்டை

முகத்தை அஷ்ட கோணலாக்கிப் பாடும் சாஸ்திரீய இசைக் கலைஞர்கள் பற்றி அராத்து மிக மோசமான பதிவு ஒன்றைப் போட்டிருக்கிறார். பொதுவாக இது விஷயங்களை நான் அவரோடு நேரில்தான் விவாதிப்பது வழக்கம். ஆனால் இதை அவர் பொதுவில் எழுதியிருப்பதால் நானும் பொதுவிலேயே எழுத வேண்டியிருக்கிறது. எனக்குக் கிரிக்கெட் தெரியாது. மைதானத்தில் நடுவில் ஏன் ஒரு இடம் மட்டும் புல் இல்லாமல் வெள்ளையாக இருக்கிறது என்று கேட்கும் அளவுக்குத்தான் எனக்கு கிரிக்கெட் ஞானம் உண்டு. அதனால் கிரிக்கெட் பற்றி நான் … Read more

ஆசீர்வாதம் (குட்டிக் கதை)

நான் கர்ம வினையை நம்புபவன்.  கர்மாவுக்கெல்லாம் விஞ்ஞான ரீதியான சோதனை, நிரூபணம் எதுவும் கிடையாது.  பெரியோர் சொல்வதையும் சில அனுபவங்களையும் வைத்து நாமே முடிவு செய்து கொள்ள வேண்டியதுதான்.  இல்லாவிட்டால் என் பழைய நண்பர் ஒருவர் குடித்த குடிக்கு எப்போதோ மேலே போயிருக்க வேண்டும்.  அவர் தெளிவாகச் சொல்லி விட்டார். யாரும் அஞ்ச வேண்டாம்,  என் வயது 85 என்று.  அவருக்கு சோதிடம் தெரியும்.  நான் அந்நியோன்யமாக குடும்ப வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த போது பிரிந்து விடுவீர்கள் … Read more

கோட் சூட் பற்றி தமிழ்ப்பிரபா

தமிழ்ப்பிரபா ஃபேஸ்புக்கில் எழுதியது பின்வருவது: கோட் சூட் தான் உயர்வு என்று ஒப்புக்கொள்வதில் இருக்கிறது நமது வீழ்ச்சி.// மேலே இருப்பது நண்பர் தமிழ் ஸ்டுடியோ அருண் நேற்று எழுதிய குறிப்பு. Casteless collective மாதிரியான புதிய விஷயங்களை முன்னெடுக்கும் தொடக்கத்திலேயே ‘வீழ்ச்சி’ என்கிற வார்த்தையையெல்லாம் அவர் பயன்படுத்த வேண்டிய அவசரம் என்னவென்று எனக்குப் புரியவில்லை. இந்த பொதுச்சமூகம் எதையெல்லாம் உயர்வாகக் கருதியதோ அதை ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு அனுமதிக்காமல் மறுத்து வந்ததன் எதிர் அரசியல்தான் இந்த கோட்சூட். … Read more

யூதாஸ்: அறிமுகக் கூட்டம்

புத்தகத் திருவிழா தள்ளிப் போனதில் எல்லோருக்கும் வருத்தம் தான். ஆனால் தனிப்பட்ட கொண்டாட்டங்களுக்குத் தடையிட முடியுமா என்ன! யூதாஸ் நாவலுக்கு ஓர் அறிமுகக் கூட்டம். இந்த நாவலை நான் சாருவுக்காக எழுதினேன். எழுதும் போதே இது தமிழ் உலகில் எப்படியாக ஏற்றுக்கொள்ளப்படும் என்ற சந்தேகம் எழுந்த வண்ணம் இருந்தது. காரணம் முற்றிலும் அந்நியமான நிலம் மற்றும் கலாச்சாரம் கொண்டு கட்டமைக்கப்பட்டது இந்நாவல். ஒன்றில் மட்டும் தெளிவாக இருந்தேன்: சாரு நிவேதிதாவுக்காக எழுதுகிறேன் என்று தீர்மானித்தப் பிறகு ‘நானும் … Read more

என்ன கவி பாடினாலும்…

https://m.facebook.com/watch/?extid=NS-UNK-UNK-UNK-IOS_GK0T-GK1C&v=848678119211587&ref=sharing&_rdr சித் ஸ்ரீராம் பாடியது. பக்க வாத்தியங்கள் இல்லாமல். அற்புதம். சித் பாடிய அத்தனை சினிமா பாடல்களையும் விட இது எனக்கு மிகவும் பிடித்தது. இதை அனுப்பிய வினித்துக்கு என் நன்றி. இந்தப் பாடல் பற்றி விரிவாக எழுத வேண்டும். நேரமில்லை.

அசைவம்

பா.ராகவன் நேற்று ஸீரோ டிகிரி பப்ளிஷிங் அலுவலகம் போய் நூற்றுக்கணக்கான புத்தகங்களில் கையெழுத்துப் போட்ட மாதிரி நானும் ஒருநாள் அங்கே செல்லலாம் என்று நினைக்கிறேன். மதிய உணவுதான் பிரச்சினை. ஒரே சைவர்களாக அமர்ந்திருக்கும் இடத்தில் நான் மட்டும் அசைவம் சாப்பிட கூச்சப்படுவேன். அதனால் பக்கத்திலேயே இருக்கும் ஒரு உலகத் தரமான அசைவ உணவுக் கூடத்துக்கு- கோவை அலங்கார் விலாஸ் – நான் மட்டும் நைஸாகப் போய் வந்து விடலாம் என்று யோசனை. அது ஒரு பிரபல இசையமைப்பாளரின் … Read more