அவ்ட்ஸைடர் பற்றி…

பொதுவாக எனக்குப் பணம் அனுப்புபவர்களின் பெயரை நான் வெளியிடுவது இல்லை.  அது சம்பந்தப்பட்டவர்களுக்கு இடைஞ்சலைத் தருகிறது என்பதால்.  ஆனால் என் அன்புக்குரிய நண்பர் நேசராஜ் செல்வத்தின் (கிருஷ்ணகிரி) இந்தக் குரல் செய்தியை அப்படியே உங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்வதில் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.  ஏனென்றால், நான் உண்மையிலேயே சொல்கிறேன், த அவ்ட்ஸைடர் தொடர் அளவுக்கு உணர்வுபூர்வமாக நான் வேறு எதையுமே எழுதியதில்லை.  ஸீரோ டிகிரி மட்டுமே விதிவிலக்கு.  ஆக, அவ்ட்ஸைடரை யாரும் படிக்கிறார்களா, அதன் முக்கியத்துவத்தைப் புரிந்து … Read more

வல்லீர்கள் நீங்களே!

திருப்பாவையின் பதினைந்தாவது பாடல் எல்லே இளங்கிளியே என்று தொடங்கும்.  அதில் ஒரு கருத்து உண்டு.  வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக. நீங்களே வலிமையானவர்கள், நானே தோற்றவளாக இருந்து விட்டுப் போகிறேன் என்று பொருள்.  இதுதான் எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து என் வாழ்வியல் தத்துவம்.  இதுதான் இந்தியத்துவம்.  இதுதான் இந்தியாவின் ஆன்மா.  நான் எப்போதுமே சொல்லி வருகிறேன், நான் ஒரு ஐரோப்பியனாக வாழ்கிறேன் என்று.  ஆனால் அடி ஆழத்தில் இந்த இந்தியத்துவம்தான் என் சுவாசமாக இருக்கிறது.  இந்தியர்களிடம் … Read more

த அவ்ட்ஸைடர் – 28

தினமுமே கிட்டத்தட்ட 2000இலிருந்து 3000 வார்த்தைகள் வரை தட்டச்சு செய்கிறேன்.  இதுவரை வாழ்நாளில் இந்த அளவுக்கு எழுதியதில்லை.  அதோடு, தினந்தோறும் இந்த அளவு தட்டச்சு செய்கிறேன்.  வலது கை தோள்பட்டை தேள் கொட்டினாற்போல் கடுக்கிறது.  இருந்தாலும் பேய் வேகத்தில் தட்டச்சு செய்து கொண்டேயிருக்கிறேன்.  ஒரு நிமிடத்தில் எத்தனை வார்த்தைகள் என்று தெரியவில்லை.  அதி தீவிர வேகமாகத்தான் இருக்க வேண்டும்.  இந்த 3000 வார்த்தைகளில் 2000 வார்த்தைகள் மட்டுமே ப்ளாகில் ஏறுகின்றன.  மீதி ஆயிரம் புத்தகமாக வரும். ஒரு … Read more

த அவ்ட்ஸைடர் – 27

முதலில் எங்கள் திட்டம் எப்படி இருந்தது என்றால் மீதமுள்ள ஆயுதங்களை எடுத்துக் கொண்டு போய் பதுக்கி விடலாம் என்பதுதான்.  ஆனால் இந்தச் சிறிய மிட்ஸுபிஷியில் அதை வைக்க இடம் இல்லை. இப்போதைய முதல் வேலை, சாந்த்தியாகோவை அசுன்ஸியோனில் விட வேண்டும்.  அங்கே சாந்த்தியாகோவின் கார் இருக்கிறது.  ஆஸ்வால்தோவை பராகுவாயிலிருந்து வெளியேற்றுவதுதான் சாந்த்தியாகோவின் முதல் பணி. ஆஸ்வால்தோ கடையை மூடினான்.  இடுகாட்டுக்குப் போய் சாந்த்தியாகோவைப் பார்த்து செய்திகளைக் கேட்டுக் கொண்டான்.  வெளியேறும் திட்டத்தில்தான் மாற்றம் என்றான் சாந்த்தியாகோ. இருவரும் … Read more

கடவுள் வந்திருக்கிறார்

என் நண்பரொருவரின் வாட்ஸப் dpயில் கடவுளின் நிழற்படம் மரபணுத் தொடர்ச்சியாய் வந்த கடவுள் கடவுள் என்றாலே மரபணுத் தொடர்ச்சிதானே மனிதர் யாவரும் தம்மை விடக் கடவுளை நேசிக்கும் காரணம் இதுதான் கடவுள் என் மரபணுத் தொடர்ச்சி என் ஸ்தூலத்தின் வாரிசு நண்பர் பலர் இடதுசாரிகள் கம்யூனிஸ்டுகள் அவரவர் கடவுளுக்கு அவரவர் வைத்த பெயர் கார்ல் மார்க்ஸ் லெனின் மா சே துங்   ஒருத்தர் எல்லாவற்றையும் தாண்டினார் புரட்சி நாயகன் சே குவேரா சே குவேரா போதாதா … Read more

the outsider – 26

செப்டம்பர் 15, திங்கள் கிழமை.  சாந்த்தியாகோவின் வீட்டுக்கு வந்த ரமோன் கட்டிடத் தொழிலாளிக்கான உடுப்பை அணிந்து கொண்டான்.  இருவரும் சேர்ந்து ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் எடுத்து ட்ரக்கில் போட்டார்கள்.  வழக்கம் போலவே ட்ரக் கிளம்பும்போது பிரச்சினை கொடுத்தது.  ஆனால் நான்காவது, ஐந்தாவது முயற்சியில் கிளம்பியது.  ஆஸ்வால்தோ தன் வாக்கி டாக்கியை எடுத்து சட்டைக்குள் மறைத்து வைத்துக் கொண்டு பெட்டிக் கடைக்குக் கிளம்பினான்.  ஆர்மாந்தோ வரும் வழியிலேயே ஒரு இடத்தில் காரை நிறுத்தி சாந்த்தியாகோ, ரமோன் மாதிரியே தானும் கட்டிடத் … Read more