அபிலாஷுக்கு ஓர் எதிர்வினை

அபிலாஷின் கல்யாண மாலை ஒழிக கட்டுரையின் பெரும்பகுதியோடு எனக்கு உடன்பாடுதான். ஆனால் நான் கலந்து கொண்ட எந்த நிகழ்ச்சியும் அடிதடி இல்லாமல் – எனக்குக் கொலை மிரட்டல் விடப்படாமல் நடந்ததே இல்லை – விஷ்ணுபுரம் விழா மட்டுமே விதிவிலக்கு. விவாதங்களும் உரைகளும் இன்னும் செறிவாக இருந்திருக்கலாம்தான். ஆனால் அதை சாக்காக வைத்து எனக்குக் கொலை மிரட்டல் விடுவதும் நடந்து கொண்டேதானே இருந்தன. இப்போது மனுஷின் கவிதை வெளியீட்டு விழாவில் பேசுகிறேன். பவுன்ஸர்களோடுதான் செல்ல வேண்டும். அந்த பயம் … Read more

கல்யாண மாலை ஒழிக! : அபிலாஷ் சந்திரன்

விஷ்ணுபுரம் இலக்கிய நிகழ்வுகளின் அரசியலின்மை பற்றி தோழர் புலியூர் சொன்னதை குளச்சல் யூசுப் திசைதிருப்பி அங்கு மதுவும், போதையும், அரைகுறை ஆடைகள், ஆரவாரங்கள் அனுமதிக்கப்படுவதில்லை என சிலர் வருத்தப்படுவதாக ஒரு பதிவு எழுதியுள்ளார். அது கண்டிக்கத்தக்கது. நான் இதைப் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன், திரும்பவும் சொல்கிறேன் – பழைய சிறுபத்திரிகை இலக்கிய அரங்குகள் குடித்துக்கொண்டு வேட்டியை அவிழ்த்துப் போட்டு பரஸ்பரம் அடித்தும் கத்தியும் ஆர்ப்பாட்டம் செய்யும் இடங்கள் எனும் மனப்பதிவு சிலருக்கு உண்டு. என் அனுபவத்தில் அப்படி … Read more

ஆட்டோநேரட்டிவ் பப்ளிஷிங்: சில செயல் திட்டங்கள்

முன்பே எழுதியிருக்கிறேன், எனக்குப் பதிப்பகம் தொடங்குவது பிடிக்காது என்று. என் புத்தகங்களை நானே பதிப்பித்த அனுபவம் ஒரு காரணம்.  என் நண்பர்கள் பதிப்பகம் ஆரம்பித்தாலும் பிடிக்காது, லாபம் வராது என்பதால்.  ஆனாலும் என் நண்பர்கள் ஆரம்பித்துக் கொண்டே இருக்கிறார்கள்.  முதலில் ஸீரோ டிகிரி.  இப்போது ஆட்டோநேரட்டிவ்.  ஆட்டோநேரட்டிவை இயக்கும் நண்பர்கள் யாவரும் மாதம் இருபதாயிரம் ரூபாயிலிருந்து அறுபதாயிரம் ரூபாய் வரை சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்க இளைஞர்கள்.  ஒருத்தர் சொந்தமாக ஒரு பிஸினஸ் ஆரம்பித்திருக்கிறார்.  இன்னும் சம்பளம் … Read more

மனுஷ் பாதிப்பில் சில கவிதைத் தலைப்புகள்!

ஹமீது என்னிடம் நட்பில் இருந்த போது என் புத்தகங்களுக்கு அவர்தான் தலைப்பு வைப்பார். காமரூப கதைகள் அவர் வைத்த தலைப்புதான். காமரூபக் கதைகள் என்று அவர் வைத்த தலைப்பில் நடுவில் உள்ள க்-ஐ நான் நீக்கினேன். அவ்வளவுதான். இலக்கணப்படி க் வர வேண்டும். ஆனால் நான் அவ்வப்போது இலக்கணத்தை மீறுவேன். இப்போது ஹமீதின் பதின்மூன்று கவிதைத் தொகுதிகளின் தலைப்புகளையும் பார்த்தேன். எல்லா தலைப்புகளையும் நான் சமீப காலத்தில் நேர் வாழ்வில் புழங்கியிருக்கிறேன். மகிழ்ச்சியாக இருந்தது. இப்படி என்னுடைய … Read more

அன்பு குறித்து ஒரு பின்நவீனத்துவவாதியின் புகார் மனு (குறுநாவல் குறித்த அறிவிப்பு)

அன்பு குறித்து ஒரு பின்நவீனத்துவவாதியின் புகார் மனு என்ற தலைப்பிலான என்னுடைய குறுநாவல் புத்தக விழாவின் போது வெளியாகும். வழக்கம் போல் ஸீரோ டிகிரி வெளியீடு. (இந்தக் கடைசி வாக்கியத்தை எழுதியிருக்க மாட்டேன். ஆனால் நண்பர்கள் ஆட்டோநேரட்டிவ் பதிப்பகம் ஆரம்பித்திருப்பதால் குழப்பத்தைத் தவிர்க்கவே ஸீரோ டிகிரி வெளியீடு என்று சொன்னேன். என்னுடைய புத்தகங்கள் அனைத்துமே எப்போதுமே ஸீரோ டிகிரியிலிருந்துதான் வெளிவரும். அங்கே நிராகரிக்கப்பட்டால் மட்டுமே ஆட்டோநேரட்டிவ். அப்படி நிராகரிக்கப்படுவதற்கான சாத்தியமும் தெரியவில்லை. கதையை சீனியிடம் விவரித்தேன். அடி … Read more

அறம்

எடிட்டர் லெனின் அவர்களுக்கு… நான் தங்களிடம் என் வாழ்க்கை வரலாறு குறித்த ஆவணப்படமான த அவ்ட்ஸைடர் படத்துக்கு படத் தொகுப்பு பணியைச் செய்து தர முடியுமா என்று ஆறு மாதங்களுக்கு முன்பு ஃபோனில் கேட்ட போது என் வீட்டுக்கே நேரில் வந்த நீங்கள் படத்தொகுப்பை செய்து தருவதாகச் சொன்னீர்கள். எடுத்த எடுப்பிலேயே முப்பதாயிரம் ரூபாய் பணமும் வாங்கிக் கொண்டு விட்டீர்கள். வங்கிக் கணக்கில் அதற்கான சாட்சி உள்ளது. அதற்குப் பிறகு நாம் தினந்தோறும் பேசினோம். நவம்பர் 15-ஆம் … Read more