புத்தக விழா பதிவுகள் – 1

நேற்று புத்தக விழாவுக்குச் சென்றிருந்தேன்.  டார்ச்சர் கோவிந்தனைப் பார்க்காத விழா.  சலிப்பாக இருந்த்து.  ஆம், நான் ஒரு மஸாக்கிஸ்ட் என்று நேற்று தெரிந்து கொண்டேன்.  டார்ச்சர் இல்லாத்தால் சலிப்பு.  இனிமேல் நாளையிலிருந்து வர வேண்டாம் என்று நினைத்தபடியே எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் மூன்று அழகிகள்.  வயது இருபது இருக்கும்.  உங்களின் தீவிர வாசகிகள் சாரு என்று அறிமுகம்.  தீவிரம் கவர்ந்ததை விட சாரு கவர்ந்தது.  பேசிக் கொண்டிருந்து விட்டுக் கிளம்பி விட்டார்கள்.  உடனே ஒரு … Read more

பஸ்ஸில் அட்டை போடும் சிறுமிகள்

டவுன் பஸ்களில் நீங்கள் ஒரு காட்சியைப் பார்க்கலாம். பஸ் கிளம்புவதற்கு ஐந்து பத்து நிமிடங்களுக்கு முன்னால் எல்லா பயணிகளின் தொடையிலும் ஒரு பத்து வயது சிறுமி ஒரு போஸ்ட் கார்டு சைஸ் அட்டையைப் போட்டு விட்டுப் போய் விடுவாள். அதில் எனக்கு அம்மா அப்பா கிடையாது, என்னால் வாய் பேச முடியாது, ஆனாலும் நான் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஐயாக்களே, அம்மாக்களே, என்னை உங்கள் பெண் போல் நினைத்து எனக்குப் பண உதவி செய்யுங்கள்… இன்னும் … Read more

வாழ்க்கையில் எடுத்த மிகத் துணிச்சலான முடிவு

ஆம், அன்பு குறித்து ஒரு புகார் மனு நாவலை எழுதத் துணிந்ததுதான் என் வாழ்வில் நான் எடுத்த மிகத் துணிச்சலான முடிவு. இது வெளிவந்தால் என் உற்றம் சுற்றம் நட்பு என்று பலரும் என்னை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து போகலாம். நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். நான் பிரேதங்களின் மீது நடந்து எழுதுகிறேன் என்று. என் வாழ்வை எரித்துக் கொண்டு எழுதுகிறேன். என்ன ஆனாலும் சரி என்று துணிந்து எழுதியிருக்கிறேன். இதை எழுதியே ஆக வேண்டும். உலகளந்தான் என்ற … Read more

அன்பு குறித்து ஒரு புகார் மனு: நாவல்

தேகம் நாவலை இரண்டு வாரத்தில் எழுதி முடித்தேன். கூடவே அராத்து தங்கியிருந்தார். காலடி என்ற ஊரில் ரீஜினுவேஷன் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தோம். அப்போது எழுதியது அந்த நாவல். இப்போது தேகத்தைப் போல் மூன்று மடங்கு பெரிய நாவலை ஒரே வாரத்தில் எழுதி விட்டேன். இப்போது செப்பனிட்டுக் கொண்டிருக்கிறேன். அன்பு குறித்து ஒரு புகார் மனு. புத்தக விழாவில் வெளிவரும். இது ஒரு ஆட்டோஃபிக்‌ஷன் நாவல். கொக்கரக்கோவின் சேட்டைகள் அதிகம் வரும் நாவல். நாவலின் ஹீரோ கண்ணாயிரம் பெருமாள் … Read more

நீங்கள் வேறு, நாங்கள் வேறு, ஆனாலும் சமரசமாய் வாழ்வோம்…

இந்தத் தலைப்பில் அல் குர்-ஆனில் ஒரு வசனம் உண்டு. ஔரங்ஸேப் நாவலில் அதை விரிவாக எழுதியிருக்கிறேன். ஜெயமோகனின் வாசகர் ராம்குமார் அருண் இன்று பின்வருமாறு எழுதியிருக்கிறார். விஷயம் விஷ்ணுபுரம் விழா பற்றியது. ”இந்த ஆண்டு சாரு நிவேதிதாவோ அவருடன் வந்தவர்களோ ஒரு அரங்கிலேகூட உட்கார்ந்து கவனிக்கவில்லை. அவர்கள் சாரு சந்திப்புக்கும் விழாவுக்கும் மட்டும்தான் வந்தார்கள்.” சில விஷயங்களை நான் தெளிவுபடுத்த வேண்டும். ஏற்கனவே தெளிவு படுத்தியும் இருக்கிறேன். ஆனால் ராம்குமார் அருண் என் ப்ளாகைப் படிப்பதில்லை என்று … Read more