பிரார்த்தனை குறித்த கேள்வியும் பதிலும்: சக்திவேல்

அன்புள்ள சாரு உங்களுடைய புதிய நூலாக அன்பு ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு வந்துள்ளதாக அறிந்தேன். புத்தக விழாவில் நீங்கள் சுருதி டிவிக்கு கொடுத்த சிறு பேட்டி ஒன்றையும் கண்டேன். அன்பு என்ற பேரில் ஒருவனை சமூகம் எப்படியெல்லாம் வன்முறைக்கு உட்படுத்துகிறது என்பதை எழுதியிருப்பதாக கூறியிருந்தீர்கள். நான் இன்னும் நாவலை வாசிக்கவில்லை. இனிமேல்தான் வாங்க வேண்டும். என்னிடம் கடைசியாக வாசிக்காது வைத்திருந்த உங்களுடைய இரு நாவல்களான தேகம், எக்ஸிடென்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும் ஆகிய நாவல்களை சென்ற வாரத்தில் … Read more

மாதம் ஒரு நூல்…

அநேகமாக உலக அளவில் தேடினாலும் இந்த அளவுக்குத் தரமாகவும் அதிகமாகவும் எழுதுவதற்கு வேறு எங்கும் எழுத்தாளர்கள் கிடைக்க மாட்டார்கள். சர்வதேச அளவில் எழுத்தாளர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதுமே பத்து நூல்கள்தான் எழுதி முடிக்கிறார்கள். இங்கே லோக்கலாக அருந்ததி ராய் ஒரு உதாரணம். ஒரே ஒரு நாவலை வைத்துக் கொண்டே மூன்று பத்தாண்டுகளை ஓட்டி விட்டு இப்போது இரண்டாவது நாவலை எழுதியிருக்கிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன் நான் பூச்சி என்ற தலைப்பில் ஒரு தொடரை தினந்தோறும் எழுதியது உங்களுக்கு … Read more

ஆரோவில் சிறுகதைப் பட்டறை

வரும் 28ஆம் தேதி பாண்டிச்சேரி அருகில் உள்ள ஆரோவில் வன இல்லத்தின் வனப் பகுதியில் ஒரு சிறுகதைப் பட்டறை நடக்க இருக்கிறது. ஏற்கனவே செய்தி தெரிவித்திருக்கிறேன். மூன்று சிறுகதைகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும். கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் வினித்தைத் தொடர்பு கொள்ளவும். விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் சிறுகதைகள்: ஆண்டன் செகாவின் வான்கா. இது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. எங்கே என்று எனக்கு எழுதிக் கேட்காதீர்கள். தேடினால் பத்து நொடியில் கிடைக்கும். இரண்டாவது கதை மௌனியின் அழியாச் சுடர். … Read more

நீதி போதனையும் இலக்கியமும்

நீதி சொன்னால் அது இலக்கியத்தில் மட்டம் என்று எல்லோருக்கும் ஒரு கருத்து உண்டு.  எனக்கும்தான்.  இலக்கியம் ஒன்றும் நீதி போதனை அல்ல.  திருடன் மணியன் பிள்ளை என்ற சுயசரிதத்தைப் படித்தால் யாருக்கும் திருடவே தோன்றாது.  சார்வாகனின் முடிவற்ற பாதையைப் படித்தால் யாருக்கும் அடுத்தவர் பணத்தின் மீது ஆசை வராது.  அறம் படித்தால் யார் வயிற்றிலும் அடிக்கத் தோன்றாது.  ஆனால் காமரூப கதைகள், ராஸ லீலா, ஸீரோ டிகிரி, ஓப்பன் பண்ணா எல்லாம் படித்தால் அதிலிருந்து நாம் எடுத்துக் … Read more

புத்தக விழா ஊறுகாய்க் கடையில் இன்று மூன்றரை மணி…

இன்று மாலை மூன்றரை மணிக்கு புத்தக விழாவின் வெளியே ஞானாம்பிகா உணவகத்துக்கு எதிரே உள்ள ஊறுகாய்க் கடைக்கு வருவேன்.  நான் ஒரு ஊறுகாய் அடிக்ட்.  இதை வைத்துக் கொண்டு எல்லோரும் ஊறுகாய் சாப்பிட ஆரம்பித்தீர்கள் என்றால் ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் பெருகி விடும்.  என் வாழ்க்கை முறை எதுவும் மற்றவர்கள் பின்பற்றுவதற்கானதல்ல.  நான் ஒன்றரை மணி நேரம் யோகாவும் ஒரு மணி நேரம் நடைப் பயிற்சியும் செய்கிறேன்.  அம்மாதிரி ஆள் ஊறுகாய் சாப்பிடலாம்.  இதுவரை வாழ்நாளில் … Read more