உடலும் பயிற்சியும்

அன்புள்ள சாருவுக்கு,நான் சிவசங்கரன். மதுரையில் இருந்து வந்து அண்மையில் உங்களை சென்னையில் சந்தித்து பேசி, புகைப்படம் எடுத்துக் கொண்டேன். அன்று, உங்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் நீங்கள் ‘கலையும் மீறலும்’ பற்றிப் பேசி முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகத்தான் எனக்கு தோன்றியது. நேரம் இன்னும் இருந்திருந்தால் நீங்கள் தொட்ட இடங்களைப் பற்றி இன்னும் நிறைய பேசியிருப்பீர்கள் என்றே தோன்றியது. நான் அவ்வளவு சிறப்பான பேச்சாளன் இல்லை என்று நீங்கள் அவ்வப்போது சொல்வீர்கள். உண்மையில், நீங்கள்தான் மிக … Read more

அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு

அன்புள்ள சாருவுக்கு, அன்பு நாவல் ஒரு அகோர தாண்டவம்..உருத்திர மூர்த்தியாய் அப்படி ஒரு ஆட்டம் நாவல் முழுவதும்… இருப்பினும் நாவலின் மையச்சரடு அன்பின் சீரான கோர்வையைப் பற்றிக் கொண்டே செல்கிறது. நாவல் உணர்த்தும் பொருள் பிரதியில் முழுதாய்ப் பொதிந்துள்ளது.. இதனுள் முத்துக் குளித்தால் தரிசனம் கிடைக்கப் பெறலாம்…கிடைக்கும்… மிலரப்பாவின் கதை மரகத மாணிக்கம்… விறுவிறுப்புக்குப் பஞ்சமே இல்ல..ஒரு 300பக்க நாவல் இவ்வளவு வேகமாக நான் படித்ததே இல்லை. போனில் படித்தால் கண் எரிகிறது என்று எப்போதும் புத்தகங்களையே … Read more

விஷ்ணுபுரம் விழா நினைவுகள்

விஷ்ணுபுரம் விழாவில் சில விடுபட்ட புகைப்படங்கள் இருந்தன. அதில் இது ஒன்று. முன்வரிசையில் சுபஸ்ரீ, சக்திவேல். பின்வரிசையில் யோகா குரு சௌந்தர், மனோபாரதி.

writer of pop colors…

சினிமா நண்பர்கள் தங்கள் படத்தில் நடிக்க அழைக்கிறார்கள். நடிப்பை விட எழுத்தே எனக்கு எளிது என்று சொன்னாலும் அவர்களே எழுத்தாளராகவும் இருந்து விடுவதால் நடிப்புதான் வேண்டும் என்கிறார்கள். எனக்கு நடிக்கத் தெரியாதே என்று சொன்னால் அது எங்கள் கவலை என்கிறார்கள். ஒரு எழுபது வயது எழுத்தாளனின் மூன்று நாள்களை முழுநீளத் திரைப்படமாக எடுக்கலாம் என்பது என் நெடுநாள் திட்டம். பொழுதுபோக்கு சினிமா அல்ல. படத்தில் வசனமே இருக்காது. வேறு நடிகர்களும் இல்லை. நான்தான் இயக்கலாம் என்று திட்டம். … Read more

வாழ்ந்து பார்த்த தருணம்: வெங்கடசுப்ரமணியன்

வாழ்ந்து பார்த்த தருணம் என்ற தலைப்பில் என் நண்பர் வெங்கடசுப்ரமணியன் ஃபேஸ்புக்கில் தொடர்ந்து எழுதி வருகிறார். பின்வரும் கட்டுரை அந்தத் தொடரின் 193ஆவது பகுதி. சென்ற மாதமே எழுதி விட்டார். நான்தான் நேரமின்மையால் பகிர முடியவில்லை. இப்போது அன்பு நாவலை முடித்து விட்டதால் கொஞ்சம் சாவகாசமாக இருக்கிறேன். டிசம்பர் 18 விஷ்ணுபுரம் விழா. அன்றுதான் என் பிறந்த நாளும். நான் என் பிறந்த நாள்களை வெகு ஆடம்பரமாகக் கொண்டாடவே விருப்பப்படுவேன். நரகத்தில் உழல்பவர்களுக்குக் கிடைக்கும் கொண்டாட்டம் அது. … Read more

என் எழுத்தைப் பாருங்கள்…

என் நெருங்கிய நண்பர் ஒருவர் இன்பாக்ஸில் வந்து ஒரு கருத்தைச் சொல்லியிருந்தார். அவர் சொன்னது சரிதான். ஆனால் எழுத்தாளர்கள் உளறக் கூடாதா? என் நாலு வரி அபிப்பிராயங்களைப் படிப்பதை விட நான் பத்து நாளில் எழுதிய அன்பு நாவலைப் படியுங்கள். கடவுளே எழுத்தாளனாகப் பிறந்தாலும் அப்படி ஒரு நாவலை எழுதியிருக்க முடியாது. என்னுடைய ஆகச் சிறந்த படைப்பு அது. ராஸ லீலா, ஸீரோ டிகிரி, எக்ஸைல் எல்லாவற்றையும் விட அன்புதான் உச்சம். இனிமேல் எழுதப் போகும் நாவல்கள் … Read more