என்ன மேட்டர்?

தோழர்க்கெல்லாம்
மணவாழ்வில் நுழையாதீரென
அனுபவ அட்வைஸ் கொடுப்பது
வழக்கம்
இப்போது இன்னொன்றையும்
சேர்க்கலாம்
யாரும் காதல் செய்யாதீர்!
தேவையெனில்
இருக்கவே இருக்கிறது
ஒன் நைட் ஸ்டேண்ட்

காரணம்?

நீண்ட இடைவெளிக்குப் பின்
அவளுக்கு ஃபோன் செய்தேன்
காரணமெதுவுமில்லை
யாழினும் குழலினுமினிய
அவள் குரலைக் கேட்கலாமே என்றுதான்
மேலும்
காரணம் வைத்துக்கொண்டா
காதலியை அழைக்கிறோம்?

எடுத்த எடுப்பில்
என்ன மேட்டர் என்றாள்

உன்னைக் கொல்ல வேண்டும்
அதுதான் மேட்டர் என்று வந்தது
வந்ததையெல்லாம் வேற்றுக்கிரகவாசிகளிடம்
சொன்னால் லோகம் அழிந்து விடும்
நிம்மதியும் கெட்டு விடும்

அதனால்
ஒரு மேட்டருமில்லை
என்று உண்மை சொன்னேன்