சமீபத்தில் ஒரு விடியோ பார்த்தேன். இளையராஜா தன்னிடன் சிம்பு பாடல் பற்றிக் கேள்வி கேட்ட ஒரு பத்திரிகையாளரைப் பார்த்து ஏய், உனக்கு எதாவது இருக்கா, ஏய் உனக்கு எதாவது இருக்கா, ஏய் உனக்கு எதாவது இருக்கா என்றும் பிறகு உனக்கு அறிவு இருக்கா, உனக்கு அறிவு இருக்கா, உனக்கு அறிவு இருக்கா என்றும் கேட்கிறார். பத்திரிகையாளர் எனக்கு அறிவு இருக்கிறதுனாலதான் கேட்கிறேன் என்று சொல்ல, இளையராஜா உனக்கு அறிவு இருக்குங்கிறதை எந்த அறிவுல கண்டுபிடிச்சே, உனக்கு அறிவு இருக்குங்கிறதை எந்த அறிவுல கண்டுபிடிச்சே, என்னோட நின்னு பேச உனக்கு என்ன தகுதி இருக்கு என்றும் பல கேள்விகளைக் கேட்கிறார். என்ன மாதிரி தேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? ஒருவேளை இதுவும் இளையராஜாவின் அனுமதி இன்றி ரகசியமாக வெளியே வந்து விட்ட விடியோவா என்று சந்தேகமாக இருக்கிறது. சம்பவம் நடந்த இடம் எதிராஜ் காலேஜ் என்பதால் பர்சனல் விடியோவாக இருக்காது என்று தோன்றுகிறது. இந்தப் பதிவினால் யாராவது பாதிக்கப்பட்டால் சொல்லுங்கள், உடனே நீக்கி விடுகிறேன்.