இறுதிச் சுற்று

அன்புள்ள சாரு, தங்களின் ’சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே’ படித்தேன். அருமை! உங்கள் எழுத்து எங்களை வசீகரிப்பது புதிதல்ல, இருப்பினும் இது அட்டகாசம்! தங்களின் பணி நெருக்கடிகளுக்கு இடையில் சந்தோஷ் நாராயணனின் ’இறுதிச்சுற்று’ பாடல்களை கேட்க முடிந்ததா? ராமசாமி பைத்தியம் பிடித்து விடுமோ என்று அஞ்சும் அளவுக்கு வேலைப் பளு.  அதற்கு நடுவிலும் நேற்று நான் (மட்டும்) இறுதிச் சுற்று போயிருந்தேன்.  காரணம், நல்ல தமிழ்ப் படம் பார்த்து மாமாங்கம் ஆகி விட்டது.  மேலும் நான் ஒரு சினிமாப் … Read more

சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே! (2)

நேற்று எழுதிய பதிவில் ஒரு முக்கிய விஷயத்தை விட்டு விட்டேன்.  வட இந்தியர்களைப் பொறுத்தவரை கேரல்காரர்கள் முரடர்கள்.  ஆனால் முரடர்களைச் சமாளித்து விடலாம்.  ஆனால் தமிழர்கள் அத்தனை பேரும் பிரச்சினைக்குரியவர்கள்.  காஷ்மீரிகளைப் போல.  தமிழர்கள் அத்தனை பேருமே பிரபாகரன்கள்தான்.  அப்படித்தான் வட இந்தியர்களின் பொதுப்புத்தியில் உறைந்திருக்கிறது. இது இலக்கியச் சூழலிலும் பிரதிபலிப்பதை அவர்கள் அவ்வப்போது பார்க்கிறார்கள்.  உதாரணமாக, பாரதீய ஞான பீடம் யாருக்குக் கொடுக்கலாம் என்று இந்தியா முழுவதிலும் இருந்து வந்து அறிஞர்கள், எழுத்தாளர்கள் தில்லியில் கூடியிருப்பர்.  … Read more