ஓவியர் சீனிவாசன்

கிழக்கு பதிப்பகத்திலிருந்து இரண்டு நூல்கள் வெளிவந்து விட்டன.  எங்கே உன் கடவுள்?  துக்ளக்கில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.  அட்டை பிரமாதம்.  விலை 90 ரூ.  நியூஸ் சைரன் பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு கடைசிப் பக்கங்கள் வந்து விட்டது.  விலை 110.  பின்னட்டை பிரமாதம். (இரண்டிலும்தான் அடியேனின் புகைப்படங்கள் உள்ளன!) இரண்டிலுமே புகைப்படம் எடுத்தவரின் பெயர் இல்லை; பதிப்பாளரின் மேல் பழி போட முடியாது;  பிழை திருத்தம் செய்தவன் நான் என்று ஞாபகம் வந்ததும் வயிறு கலங்கியது. … Read more

நீங்கள் ஒரு எழுத்தாளராக விரும்பினால்…

என் எழுத்தை வாசிக்கும் பல நண்பர்கள் அதில் உள்ள கொண்டாட்டம் குடி போன்ற விஷயங்களைத் தப்புத் தப்பாகப் புரிந்து கொண்டு பல வழிகளில் தங்கள் நேரத்தை மிக மோசமாக வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்.  இன்று உலகம் முழுவதும் பிரபலம் அடைந்திருக்கும் ஹாருகி முராகாமியின் ஒருநாள் எப்படி இருக்கிறது என்பதைப் பாருங்கள்.  இதையேதான் நானும் செய்கிறேன்.  ஒரே ஒரு மாற்றம். அவருடைய மாலை என்னுடைய காலை.  அவருடைய காலை என்னுடைய மாலை. When I’m in writing mode for … Read more

கேசரி, போண்டா, காஃபி மற்றும் இலக்கியம்…

இப்போதெல்லாம் ராயர் கஃபே போவதில்லை.  கூட்டம்.  நெரிசல்.  முழுசாக வட இந்தியர்கள் அதை ஆக்ரமித்து விட்டனர்.  உட்கார்ந்து சாவகாசமாகப் பேசவும் முடியவில்லை.  இப்போதெல்லாம் நாரத கான சபாவுக்கு எதிரில் உள்ள பிள்ளையார் கோவிலை ஒட்டியுள்ள சந்தில் உள்ள சாயி மெஸ்ஸுக்குத்தான் போகிறேன்.  தினமும் அல்ல; எப்போதாவது.  தென்சென்னையிலேயே சுவையான டிஃபன் கிடைக்கும் இடம் என்றால் இப்போதைக்கு சாயி மெஸ்தான். ஃபெப்ருவரி 27 விழாவுக்கு வருபவர்களுக்குக் கொஞ்சம் காப்பி டீ கொடுக்க வேண்டாமா என்று கேட்டார் டாக்டர் ஸ்ரீராம். … Read more